ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது: ஜியோ
ஆரம்பிக்கப்பட்ட 170 நாளில் 100 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
ஒரு
நிமிடத்திற்கு 7 பேர் ஜியோவில் இணைகின்றனர். ஜியோ வாடிக்கையாளர்கள் இதுவரை
100 கோடி ஜிகா பைட்களுக்கு மேல் இணைய சேவையை பயன்படுத்தியுள்ளனர். தினமும் 3.3 கோடி ஜிகா
பைட்களுக்கு மேல் இணைய சேவையை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் இந்தியாவை
இணைய சேவையில் முதலிடத்தில் வைத்துள்ளனர்.ஜியோவின் சலுகை காலம் முடிந்த
பின்னரும், ஏப்ரல் 1ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் கிடையாது. தற்போதுள்ள
வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இலவச வாய்ஸ் கால் சேவையை பெற ஒரு முறை ரூ.99
மற்றும் அன்லிமிடெட் இணைய சேவையை பெற மாதந்தோரும் ரூ. 303 செலுத்தினால்
போதும். இதற்காக ஜியோ பிரைம் சேவை என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக வேக டிஜிட்டல் சேவை அளிப்பது ஜியோ மட்டுமே. இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...