SOCIOLOGY படி பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளில் வீழ்ச்சி அடைந்த பணிகளில் ஆசிரியர் பணியும் ஒன்று..
ஒரு சமூகத்தில் "ஆசிரியர்" என்பவர் செய்யும் அல்லது செய்யக்கூடிய விஷயங்கள் / மாற்றங்கள் நிறைய...
வேறு எந்த பணியிலும், குறைந்தபட்சம் ஐம்பது பேருடன் அன்றாடம் உரையாடும் வாய்ப்புகள் கிடைக்காது..
ஒரு ஆசிரியர் படைப்பூக்கம் கொண்டு இருந்து, சமூகம் அதன் மாற்றங்களைக் குறித்து பிரக்ஞையுற்று இருந்து, மாணவர்களுடன் திறந்த மனதுடன் உரையாடல்களை நிகழ்த்தக் கூடியவராக இருக்கும் பட்சத்தில், அது சமூகத்துக்கே உரமாவது போல..
முந்தைய தலைமுறையில் ஆசிரியர்கள் (மருத்துவர்களைப் போன்று) மிக உயர்வாகக் கருதப்பட்டவர்கள்..
முந்தைய தலைமுறையில் ஆசிரியர்கள் (மருத்துவர்களைப் போன்று) மிக உயர்வாகக் கருதப்பட்டவர்கள்..
ஒரு FORM நிரப்பவோ, சந்தேகங்கள் கேட்கவோ, கவுன்சில்லிங் பெறவோ, வேலையில்சேருவதைக் குறித்து கேட்கவோ, ஆசிரியர்களை மட்டுமே நாடுவார்கள்..நிறைய முதல் தலைமுறை மாணவர்களின் FOSTER தந்தைகளாக, MENTORS ஆக ஆசிரியர்கள் விளங்கினர்..
ஒரு சமூகத்தை நடைபிணமாக ஆகாமல் பார்த்துக் கொள்ள அவர்கள் தேவை என்று கருதப்பட்டது..
30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு ஆதர்ச நாயகர்களாக திகழ்ந்தனர்...
மருத்துவத் துறையில் கூட பல பழம்பெரும் மருத்துவர்கள் ஆசிரியர்களாகவும் வெற்றிகரமாகத் திகழ்ந்தனர்...
ஆனால், 2000 - ங்களுக்குப் பிறகு சமூகத்தில் ஆசிரியர்களின் மதிப்பும், மாணவர்கள் அவர்களை மதிப்பிடும் விதமும் மாறியது..இதன் காரணிகள்:
1). ஆசிரியர்களின் தகுதி வெகுவாக குறைந்து, வேறு எதுவும் கிடைக்காதவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக மாறும் நிலை ஏற்பட்டது.
2).பண்ணைகள் போல நடத்தப்படும் பள்ளிகள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஆசிரியர்கள் வார்டன் வேலை அல்லது கண்காணி வேலை அல்லதுஅடியாள் வேலை பார்க்க நிர்பந்திக்கப்பட்டனர்...அப்படிப்பட்ட ஆசிரியர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் இனம் மீதே எரிச்சல்/வெறுப்பு மேலோங்கியது..
3). சமூக படிநிலைகளில் ஆசிரியர் பணி, தர தரவென கீழிறங்கியது...வெறும் பாடம் நடத்துபவர்கள் என்ற வட்டத்துக்குள் அடைக்கப்பட்டனர்.அதுவும், இணையம் வந்த பிறகு, அவர்கள் மட்டும் தான் கல்வியின் ஊற்றுக்கண் என்ற நிலை வேரோடு சாய்ந்தது.
4).மாணவர்களுக்கும் -ஆசிரியர்களுக்குமான உரையாடல்கள், சந்திப்புகள் பல காரணங்களால் குறைந்து போனது..
எனது தந்தை 38 வருடங்களாக ஆசிரியராக இருப்பவர்..ஒரே குடும்பத்தில் இரண்டு தலைமுறைகள் படித்துள்ளனர்..
அதில் 2000க்கு முற்பட்ட பல மாணவர்கள் இன்றும் சந்தித்து வரும் சூழலில், அதன் பின்னான மாணவர்கள் பள்ளி முடிந்தவுடன் சந்திக்க அவ்வளவு விருப்பம் காட்டுவதில்லை..
கடந்த ஐந்து வருடத்திய மாணவர்கள் அதற்கும்மேல்... இதனை ஓர் உதாரணமாக எடுத்துக்கொண்டால் கூட, மாணவர்களுக்கு ஆசிரியர் மீதான அபிமானம் குறைந்துள்ளதோ என எண்ணவும் தோன்றுகிறது..
இப்படி, மாணவர்கள் ஆசிரியர்களையும் ஒரு SERVICE PROVIDER - CUSTOMER அளவில் பார்ப்பதால் அல்லது அதற்கும் கீழே பார்ப்பதால், முன்பு ஒரு சமூகத்தில் ஆசிரியர் ஆற்றும் அல்லது ஒரு மாணவன் உருவாக்கத்தில் இருந்த உணர்வு பரிமாற்றம் சுத்தமாக வழக்கொழிந்தது மாதிரி தோன்றுகிறது....
100% true
ReplyDelete