சென்னை, தலைமை செயலகத்தில், ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன; அவற்றை
நிரப்ப வேண்டும்' என, தலைமை செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தலைமை செயலகத்தில், அனைத்து துறை செயலர் அலுவலகம் மற்றும் துறை பிரிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு, 250 அலுவலக உதவியாளர்கள், 75 நேர்முக எழுத்தர்கள், 100க்கும் மேற்பட்ட தட்டச்சர்கள், 202 உதவிப்பிரிவு அலுவலர்கள், 180 பிரிவு அலுவலர்கள், 10 சார்பு செயலர்கள் பணியிடங் கள் காலியாக உள்ளன.
இவற்றில்,உதவிபிரிவு அலுவலர்கள் பணியிடம்,விரைவில் நிரப்பப்பட உள்ளது. மற்ற பணியிடங்களை நிரப்பும் பணி துவக்க பட வில்லை. அலுவலக உதவியாளர்கள் இல்லாமல், பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும், தற்போது பணியில் உள்ள, அலுவலக உதவியாளர்களில், பெரும்பாலா னோர் செயலர்களின் வீடுகளில், வீட்டு வேலை செய்து வருகின்றனர். பெண் உதவியாளர்கள், சமையலர்களாக பணிபுரிகின்றனர்.
முக்கிய துறையான பொதுத் துறையில், 80 அலு வலக உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில், 40 காலியாக உள்ளன. மீதமுள்ள உதவி யாளர்களில், சிலர் ஏற்கனவே துறை செயலர்களாக இருந்தவர்களின் வீடுகளில் பணிபுரிகின்றனர். இதன் காரணமாக, பணியில் உள்ளவர்களுக்கு, பணிச்சுமை அதிகரித்துள்ளது.
தலைமைசெயலகத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், அனைத்து துறைகளிலும், ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்த அரசு பணியிடங்களில், 30 சதவீதப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், 20 சதவீத ஊழியர்கள், பணி ஓய்வு பெற உள்ளதாக, தகவல்
வெளியாகி உள்ளது. எனவே, ஊழியர்கள் நலன் கருதி, காலியிடங்களை நிரப்ப வேண்டும் என, அனைத்து ஊழியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
தலைமை செயலகத்தில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் சார்பில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...