உத்தராகண்ட் மாநிலத்தில் சில பள்ளிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே திறக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்து விட்டதன் விளைவாக 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் கடந்தசில ஆண்டுகளாக
மூடப்பட்டுள்ளது. எனினும், இந்த பள்ளிகள் தேர்தல் நேரத்தில் இந்த பள்ளிகளை திறந்து சுத்தம் செய்து வாக்குச்சாவடியாகப் பயன்படுத்துகின்றனர். அந்த மாவட்டத்தின் போனா கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளும் மூடப்பட்டது. இந்தியா-நேபால் எல்லையில் அமைந்துள்ள தாருச்சாலா தொகுதி பள்ளி 2013 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இவ்வாறு மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் போனா மற்றும் கோல்பா கிராமங்களை சேர்ந்த 632 வாக்காளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்ளூர்வாசியான புரான் பாண்டே, “இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்களின் முக்கியமான தொழிலாக விவசாயம் இருந்துவருகிறது. விவசாயம் பொய்த்துப் போனதால் வேலைக்காக அருகிலுள்ள முன்சியாரி நகருக்கு பெரும்பாலான குடும்பங்கள் இடம்பெயர்ந்துவிட்டன. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் குறைந்தது. இதனால் அந்த பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
அருகில் உள்ள திதிஹாத் தொகுதி கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இதே நிலைதான். புலாகயான் அரசு ஆரம்ப பள்ளி, மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டது.
புலாகயான்,அடாலி மற்றும் மஜ்ஹேரா கிராமங்களை சேர்ந்த 387 வாக்காளர்களுக்காக புலாகயான் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2014 ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலுக்காக அந்த பள்ளி திறக்கப்பட்டது.
இந்த பிரச்னை பித்தோராகர் மாவட்டத்தில் மட்டும் இல்லை. குமாயோன் மலை மாவட்டங்களிலும் இதே கதை தான் நீடிக்கிறது. உதாரணமாக சம்பாவத், சுனாடி கிராமத்தில், 55 குடும்பங்கள் இருந்தது. தற்போது 20 குடும்பங்கள் மட்டுமே உள்ளது. இதன் விளைவாக, அங்குள்ள ஆரம்ப பள்ளி மூடப்பட்டது. இப்போது ஒரு வாக்குச்சாவடியாக மட்டுமே அந்த பள்ளி செயல்படுகிறது.
மருத்துவ வசதிகள், கல்வி வாய்ப்புகள் இல்லாத கிராமத்தில் யார் தங்குவார்கள்? என உள்ளூர் கிராமவாசியான நரேஷ் ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார். வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துகிறது. மோசமான கல்வி தரம் 2 கிமீ தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பித்தோராகர் மாவட்ட கல்வி அதிகாரி ஏ.கே ஜுகாரியா, “ போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் மட்டுமே பள்ளிகளை மீண்டும் திறக்க முடியும். ஆனால் அது நடக்கும் வரை, பள்ளிகளை இயக்குவது சாத்தியமற்றது” என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...