கல்வி
கொள்கைக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில
இந்திய ஆசிரியர் கூட்டணி துணை பொதுச் செயலாளர் ரங்கராஜன்
தெரிவித்தார்.தேனியில் அவர் கூறியதாவது:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக்குழுவை இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக நடை முறைப்படுத்த வேண்டும். கல்வி கொள்கைக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜனாதிபதி, பிரதமர், மத்திய நிதி அமைச்சர், ஆளுநருக்கு மனு அனுப்பியுள்ளோம்.எம்.பி., எம்.எல்.ஏ., க்களுக்கு மார்ச் 31ல் நினைவூட்டல் கடிதம் அனுப்புவோம். ஏப்.25ல், வட்டார தலை நகரங்கள், ஆக., 5ல், மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டமும் நடக்கிறது.செப்.5ல், ஆசிரியர் தினத்தை புறக்கணிக்கும் வகையில் மாநில அளவில் தர்ணா நடத்த முடிவு செய்துள்ளோம். உலக ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு அக்.5ல், டில்லியில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுபோன்று 6 கட்டமாக போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...