Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

      சென்னை, 'கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பள்ளிகளில் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற விஷயங்களில், தனியார் பள்ளிகள், பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை, வடபழனியில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், பள்ளிக் கல்வியின் எதிர்காலம் குறித்து கல்வியாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கல்வி நிலையங்களின் தலைவர் அன்பழகன், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.


இந்த மாநாட்டுக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்துரை அனுப்பியிருந்தார். அதில், 'கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பள்ளிகளில் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற விஷயங்களில், தனியார் பள்ளிகள், பள்ளி கல்வித் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்' என, கூறியுள்ளார்.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கல்வி குழும தலைவர் அன்பழகன் பேசுகையில், ''கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், வாழ்வில் தோல்வி அடைகின்றனர். நாம், அவர்களுக்கு மீன் பிடித்து தரக்கூடாது; மீனை எப்படி பிடிக்க வேண்டும் என்பதை கற்று தர வேண்டும். வீழ்வது, எழுவதற்கு தானே தவிர, விழுந்து கிடப்பதற்கு இல்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்,'' என்றார்.
கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் பேசுகையில், ''அகில 
இந்திய அளவில் நடைபெறும் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், 6 முதல், ப்ளஸ் 2 வரை உள்ள பாடத்திட்டத்தை, மாறிவரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, செறிவுள்ளதாக மேம்படுத்த வேண்டும்; அதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், ''கல்வியில் பின்தங்கியிருந்த தமிழகம், தற்போது முன்னேற்ற பாதையில் செல்கிறது. விளையாட்டு, அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரத்துக்கு, அரசு பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பாடத்திட்டம் மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும்,'' என்றார்.




2 Comments:

  1. என்ன சார் நீங்க அவர் பரிசீலிக்க படும் என்று தான் சொல்லி இருக்கின்றார் நீங்க என்னவென்றால் விரைவில் என்று போடுறீங்க!!!..... பரிசீலனை என்பது எங்க இருக்கு விரைவில் என்பது எங்க இருக்கு!!!....இப்புடி தான் நேத்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் பனி கொடுக்க முடியாது என்ற ரீதியில் பதிவு போட்டிங்க ஆனால் அவர் அப்புடியா சொல்லி இருக்கின்றார்!!...
    எல்லோருக்கும் பனி வழங்குவது சாத்தியமில்லை கிடைக்காதவர்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்லலாம் மதிப்பெண்ணை உயர்திக்கொள்ளலாம் என்ற ரீதியில் தானே சொல்லி இருக்கின்றார் இப்புடி முரண்பாடாக பயமுறுத்துவகையில் பதிவு போடுவதை தவிர்க்கவும்!!

    ReplyDelete
  2. மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கு,

    என்னுடைய பெயர் PATTAN. B , 2006 ல் B.ed முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5ஆண்டுகள் காத்திருந்தேன். 2011ல் அஇஅதிமுக அரசு சீனியாரிட்டி எடுத்து விட்டு தகுதிதேர்வு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே பார்த்து வந்த தனியார் வேலையை விட்டுவிட்டு இரவு பகலாக படித்து 2013 நடந்த தேர்வில் 84 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். ஆசிரியர் பணி கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருந்தேன். ஆனால் அரசு கொண்டு வந்த தகுதிகாண் முறையால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. தேர்ச்சி பெற்று விட்டதால் அடுத்து வரும் பணி நியமனத்தில் அரசு முன்னுரிமை கொடுக்கும் என்று 4ஆண்டுகளாக காத்திருந்தேன்.

    எங்கள் குடும்பத்தில் முதல் பட்டத்தாரியான நான் B.ed படிப்பை மிகுந்த சிரமத்திற்குகிடையில் முடித்தேன். அப்போது நாங்கள் பெற்ற மதிப்பெண்களுக்கும், இப்போது எடுக்கும் மதிப்பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அப்போது +2ல் 900மதிப்பெண் எடுப்பதே சிரமமானதே, இப்போது 1100க்கு மேல் சாதாரணமாக எடுக்கிறார்கள். ஒவ்வொரு கல்லூரிக்கும் மதிப்பெண் வழங்கும் முறையில் வித்தியாசம் இருப்பது தங்களுக்கு தெரியாததுதல்ல.

    கல்வி அமைச்சராக பெறுப்பெற்ற தாங்கள் கல்வி துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்து வருகிறீர்கள். ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கபடும் எனவும், தகுதிகாண் முறை மாற்றி அமைக்கப்படும் எனவும், கூறினீர்கள். தங்களின் பேச்சு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது. ஏற்கனவே இழந்த வாழ்க்கையை மீட்டுவிடாலாம் என்று எண்ணியிருந்தோம்.

    புதுசேரி, கேரளா மாநிலத்தில் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு
    சீனியாரிட்டி அடிப்படையில் பணிநியமனம் வழங்கபடுவதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

    ஏற்கனவே தேர்ச்சி பெற்று காத்திருக்கும் எங்களுக்கு வருகின்ற பணிநியமனத்தில் முன்னுரிமை கொடுத்து பணி வழங்க வேண்டும் என்று பணிவோடு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive