நாட்டிலுள்ள மாநிலங்களில், 12 கிழக்கு மாநிலங்கள் மட்டுமே பரஸ்பர நிதிச்
சேவைகளில் (மியூச்சுவல் ஃபண்ட்) முதலீடு செய்வதில் பின்தங்கியுள்ளதாக செபி
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியின் முதன்மை பொதுமேலாளர் பியூஷ் குப்தா கூறுகையில், ‘மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாட்டின் கிழக்குப் பகுதி மாநிலங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் மிகவும் பின்தங்கியுள்ளன. புள்ளிவிவரங்களின்படி, மொத்த மியூச்சுவல் பண்ட் முதலீடாக வந்த ரூ.17.37 லட்சம் கோடியில், வெறும் ரூ.1.29 லட்சம் கோடி மட்டுமே இம்மாநிலங்களிலிருந்து முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, மொத்த முதலீட்டில் 7.4 சதவிகிதம் மட்டுமே ஆகும்.
எனவே, கிழக்கு மாநிலங்கள் அதிகமான அளவில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்யும்வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் நிதிகளைவிட முதலீட்டு நிதி அதிகரித்து வருகிறது’ என்று கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...