சுய நம்பிக்கை, வெற்றிக்கான தெளிவான திட்டமிடுதல் போன்ற பண்புகள் இருப்பதால் தான் ஒருவரின் வெற்றி மிகவும் எளிதாகிறது.
"ஒருவர் தோல்வியடைந்தால் அவருக்கு ஏமாற்றம் கிடைக்கத்தான் செய்யும்.
அதற்கு பயந்து ஒருவர் முயற்சியே செய்யாமல் இருந்தால் அவர் பிணத்திற்கு
சமம்" என்று ஒரு பொன்மொழி உண்டு.
நாம் இந்த வகையில்தான் சிந்திக்கப் பழக வேண்டும். நீங்கள் எப்படி
சிந்திக்கிறீர்களோ, அவ்வாறே உங்களின் நடத்தையும் இருக்கிறது. நேர்மறை
எண்ணம் இருந்தால், சிறுசிறு தடைகள் உங்களின் லட்சியத்தை அடைவதை தடைசெய்ய
முடியாது.
மாற்று அல்லது மாறி விடு
"நீ எங்கே இருக்கிறாய், உன்னிடம் என்ன இருக்கிறது என்பதை வைத்து உன்னால்
முடிந்ததை செய்""உனக்கு ஒன்று பிடிக்கவில்லை எனில், அதை மாற்றிவிடு.
ஒருவேளை அதை மாற்ற முடியவில்லை என்றால், உன்னை நீ மாற்றிக்கொள். அதற்காக குறை கூறிக்கொண்டு இருக்காதே"
நமது லட்சியத்தை அடைய, நமது உடலும், மனமும் ஒருங்கிணைந்து இயங்குகிறது.
நமது பணி மற்றும் சமூக சூழல் போன்றவை நமது எண்ணம் மற்றும் செயல்பாட்டில்
முக்கியப் பங்கை வகிக்கின்றன.ஒரு மனிதனின் உருவாக்க காலகட்டமானது,
குடும்பம், பள்ளி, சமூகம், மீடியா, தொலைக்காட்சி, அரசியல், மதம் மற்றும்
கலாச்சாரப் பிண்ணனி போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது மற்றும் அந்த அனைத்து
அம்சங்களும் ஒரு மனிதனின் மனநிலை உருவாக்கத்தில் முக்கியப் பங்கை
வகிக்கின்றன
அதனால், நாம் எப்பொழுதும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் நட்புறவுடன்
இருப்பதே நல்லது. அதுமட்டுமில்லாமல் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் மிகவும்
நல்லது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...