Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கட்டணத்தை உயர்த்தாமல் இன்டர்நெட் பயன்பாடு பல மடங்கு அதிகரிப்பு பிஎஸ்என்எல் அதிரடி சலுகை

        பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தாமல்  இணையதளம் பயன்படுத்தும் ேடட்டா அளவை பலமடங்கு உயர்த்தி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகைகளை அளித்துள்ளது. இதுகுறித்து, சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


பிஎஸ்என்எல் பல்வேறு கட்டணங்களில்  தனது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு இணையதள சேவையை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களை மேலும் ஈர்ப்பதற்காக புதிய சலுகைகளை இந்த திட்டங்களில் அளிக்க உள்ளது. அதன்படி, கட்டணங்களை மாற்றாமல்  இணையதளம் பயன்படுத்த வசதியாக டேட்டாவின் அளவை பல மடங்கு உயர்த்தியுள்ளோம். உதாரணமாக, 30 நாட்களுக்கு 292 ரூபாய்க்கு டேட்டா  சேவையை பயன்படுத்தினால் இப்போது 2ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், அதிரடி சலுகையை 292 ரூபாய்க்கு 30 நாட்களுக்கு 8 ஜிபி வழங்க உள்ளோம்.
அதேபோல், 78 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 5 நாட்களுக்கு ஒரு ஜிபி டேட்டாவுக்கு  பதில் 2 ஜிபி டேட்டாவும்,  96 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு 650 எம்பிக்கு பதில் ஒரு ஜிபியும், 155 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 15 நாட்களுக்கு ஒரு ஜிபிக்கு பதில் 2 ஜிபியும், 155 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 10 நாட்களுக்கு 2 ஜிபிக்கு பதில் 3 ஜிபியும், 198 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 24 நாட்களுக்கு ஒரு ஜிபிக்கு பதில் 3 ஜிபியும் கூடுதலாக பயன்படுத்தலாம்.

அதேபோல், 444 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 60 நாட்களுக்கு 3 ஜிபிக்கு பதில் 8 ஜிபியும், 451 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 60 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா+80 ரூபாய்க்கு பேசும் நேரத்திற்கு பதில் 6 ஜிபி டேட்டா+80 நேரமும் கூடுதலாக கிடைக்கும். மேலும் 549 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு 10 ஜிபி டேட்டாவுக்கு பதில் 15ஜிபி டேட்டாவும், 561 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 60 நாட்களுக்கு 5ஜிபிக்கு பதில் 11 ஜிபியும், 821 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 60 நாட்களுக்கு 6 ஜிபிக்கு பதில் 15 ஜிபியும் கூடுதலாக பெறலாம். இவை தவிர 3099 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 60 நாட்களுக்கு அளவற்ற அழைப்புகள்+ரோமிங்கில் 500 நிமிடங்கள் இலவசம்+ 15ஜிபி டேட்டா இலவசம் ஆகிய சலுகைகளுக்கு பதிலாக  அளவற்ற அழைப்புகள் + அளவற்ற ரோமிங் அழைப்புகள்+3000 எம்எம்எஸ்+20ஜிபி டேட்டா ஆகியவை கூடுதல் சலுகையாக கிடைக்கும். இந்தச் சலுகைகள் பிப்.6ம் தேதி முதல் 90 நாட்கள் பயன்பாட்டில் இருக்கும். இந்த 90 நாளில் எப்போது ரீசார்ஜ் செய்தாலும் இந்தச் சலுகை




Related Posts:

1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!