கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப்போனதால், தமிழகத்தில் கடும் வறட்சி
நிலவுகிறது. பெரும்பாலான அணைகள், ஏரி, குளங்களும் வறண்டுபோயுள்ளன.
பொதுவாக,
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடானது, இந்த
ஆண்டின் தொடக்கத்திலேயே ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தகவல் அளிக்க கட்டணமில்லா எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் நிலவும் வறட்சிகுறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் பி.ஆனந்தராஜ் பொதுப்பணித்துறை அலுவலர்கள், உதவி இயக்குநர், கூட்டு குடிநீர்த் திட்ட அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது கூட்டத்தில் ஆட்சியர் டி.பி.ராஜேஷ், ‘ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்காதவகையில் பழுது நீக்கப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். பொறுப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று குடிநீர் விநியோகத்தைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்துக்குட்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 18004251970 மற்றும் 1299 ஆகிய கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...