'அரசின் கொள்கைகள், நடவடிக்கைகளை விமர்சித்தால் ஒழுங்கு
நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்' என, மத்திய அரசு
ஊழியர்களுக்கு, மத்திய நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஜி.எஸ்.டி.,
எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை கொண்டு வர, மத்திய அரசு
தீவிரமாக உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக எடுக்கப்பட்ட சில கொள்கை
முடிவுகளை எதிர்த்து, சுங்கம் மற்றும் கலால் துறை ஊழியர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.ஊழியர் சங்கங்கள் விமர்சனம்அதைத் தொடர்ந்து, ஊழியர்
சங்கங்களுக்கு, நிதி அமைச்சகம் சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது;
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:ஜி.எஸ்.டி., சட்டங்கள் குறித்து, மத்திய நிதி
அமைச்சர், அருண் ஜெட்லி தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில், பல்வேறு
முடிவுகளை எடுத்து வருகிறது; இதை, சில ஊழியர் சங்கங்கள் விமர்சித்து
உள்ளன.மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள்,
கருத்துக்களை கூறக் கூடாது என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இது போன்ற விமர்சனம், கருத்து தெரிவிப்பது தொடர்ந்து நடந்து வருவதை
ஏற்க முடியாது.மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கான பணி விதிகளில், 'அரசின்
கொள்கைக்கு எதிராக ரேடியோ, 'டிவி' பத்திரிகைகளில் பேட்டியோ, விளம்பரமோ
அளிக்கக் கூடாது' என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.பணி விதிகளுக்கு
எதிராக, அரசின் கொள்கைகளை விமர்சித்து, கருத்து தெரிவிப்பதை உடனடியாக
நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை உட்பட, கடுமையான
நடவடிக்கை எடுக்க நேரிடும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.'அரசுக்கு
எதிராக விமர்சனம் செய்ய வில்லை' என, சுங்கம் மற்றும் கலால் வரிக்கான,
இந்திய வருவாய் சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், அனுாப் ஸ்ரீவத்சவா
தெரிவித்துள்ளார். கடமை உள்ளது இது குறித்து அவர் கூறியதாவது:எந்த
விதத்திலும், அரசின் கொள்கையை, நடவடிக்கைகளை நாங்கள் விமர்சிக்கவில்லை. அதே
நேரத்தில், மத்திய அரசு பணியாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் என்ற
அடிப்படையில், இது தொடர்பான ஆலோசனைகள் வழங்க வேண்டிய கடமை எங்களுக்கு
உள்ளது.ஜி.எஸ்.டி., முறையை கொண்டு வர வேண்டும் என, 10 ஆண்டுகளாக உழைத்து
வருகிறோம்.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையில் எதிர்நோக்கும் சில பிரச்னைகள்,
சிக்கல்கள் குறித்தே நாங்கள் கூறியுள்ளோம்.எங்கள் விருப்பம்உலகெங்கும், 150
நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை, 100
நாடுகளில் தோல்வி அடைந்து உள்ளது. அதனால், மிகவும் வெற்றிகரமாக இந்த வரி
விதிப்பு முறையை கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்காக சில
பரிந்துரைகள், ஆலோசனைகளை அளிக்கிறோம். அதை ஏற்பது குறித்து அரசே முடிவு
செய்து கொள்ளட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அதிகாரிகள் எதை
எதிர்க்கின்றனர்?ஜி.எஸ்.டி., சட்டம் மற்றும் விதிகளை வரையறுப்பதற்காக,
மத்திய நிதி அமைச்சர் தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப்பட்டு
உள்ளது; மாநில நிதி அமைச்சர்கள், இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.கடலில், 12
கடல் மைல் வரை, வரி வசூலிக்கும் உரிமையை மாநில அரசுகளுக்கு அளிப்பது;
ஆண்டுக்கு, 1.5 கோடி ரூபாய்க்கு கீழ் வர்த்தகம் செய்வோரிடமிருந்து,
ஜி.எஸ்.டி., வரியை வசூலிக்கும் உரிமையில், 90 சதவீதத்தை, மாநில அரசுக்கு
அளிப்பதற்கு கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவுகளுக்கு ஊழியர்களும், அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...