ஓட்டல், நுகர்பொருள் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வரும், ஐ.டி.சி.,
நிறுவனம், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனைகளை அமைப்பதன்
மூலம், ஆரோக்கிய பராமரிப்பு துறையிலும் கால் பதிக்க உள்ளது.
இதற்காக, ஐ.டி.சி., நிறுவனம், சிறப்பு தீர்மானத்தின் மூலம், அதன் பங்கு முதலீட்டாளர்களிடம் ஒப்புதல் கோரி, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நிறுவனத்தின் இயக்குனர் குழு, இந்தியாவில், உலகத் தரம் வாய்ந்த, நவீன வசதிகளுடன் கூடிய, பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனைகளை அமைக்க, ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.பங்கு முதலீட்டாளர்கள் தங்கள் ஆதரவை, நிறுவனத்தின் வலைதளத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு மூலமாகவும்; தபால் ஓட்டு வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகள் மூலம், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், உயர் தர சிகிச்சை பெற வழிவகை செய்யப்படும்.
கடந்த, 2015 – 16ல், நிறுவனத்தின், நுகர்பொருள் பிரிவின் வருவாய், 28,409.83 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2030ல், 1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக, ஐ.டி.சி., நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...