டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மாற்றுத் திறனாளிகள்
அதிகாரமளித்தல் துறை ஆகியவை இணைந்து ‘ஆட்டிசம்’ தொடர்பான 3 நாள்
கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.
நேற்று நடந்த கருத்தரங்கில் மத்திய
அமைச்சர் கெலாட் பங்கேற்று பேசியதாவது:
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் சட்டம் கொண்டு வந்துள்ளோம். அந்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தேவையான விதிமுறைகளை மத்திய அரசு தயாரித்து வருகிறது. இதுகுறித்து தங்கள் கருத்துகள், யோசனைகளை நிபுணர்களும் அரசுக்கு தெரிவிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அந்த யோசனைகள் இருக்க வேண்டும். அவற்றை அரசு பரிசீலித்து விதிமுறைகளாக கொண்டுவரும்.
அந்த விதிமுறைகள் மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் வகுக்கப்பட்டுவிடும். அதன்பின் ஏப்ரல் 14-ம் தேதிக்கு முன்னதாக இந்த விதிமுறைகள் செயலுக்கு வந்துவிடும். டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு 7 குறைபாடு கள் உள்ளவர்கள் மட்டும் மாற்றுத் திறனாளிகள் என்று கருதப்பட்டனர். அந்த எண்ணிக் கையை, மாற்றுத் திறனாளிகள் சட்டத்தில் 21 ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதில் ஆட்டிசம் உட்பட பல குறைபாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் கெலாட் கூறினார்.
இனிமேல் மாற்றுத் திறனாளி கள் சான்றிதழ் நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் விதிமுறைகள் வகுக்கப்படும் என்று தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...