கடந்த வாரம் பீகார் பணியாளர்கள் தேர்வு ஆணையம், நிர்வாண நடிகை ஒருவரின்
புகைப்படத்தை மாணவி ஒருவரின் அடையாள அட்டையில் அச்சிட்டு கொடுத்து
சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இடைநிலை அளவிலான பீகார் எஸ்.எஸ்சி தேர்வு விடைகள் தேர்விக்கு முன்னரே வாட்ஸப்பில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பீகார் பணியாளர்கள் தேர்வு ஆணையம், வாட்ஸப்பில் வலம் வரும் தேர்வு விடைகள் பொலியானது என மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும், பல அறிக்கைகளில் அனைத்து பதில்களும் சரியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள இந்த தேர்வு விடைக்கும், தேர்வாணையத்தின் ஊழியர்களுக்கும் தொடர்புள்ளது என நம்பப்படுகிறது. ஜனவரி 29 ஆம் தேதி பீகார் முழுவதும் 744 தேர்வு மையங்களில் சுமார் 4.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வாணையத்தின்
தலைவர் சுதிர் குமார் பரீட்சை அனைத்து மையங்களிலும் மிகவும் தேளிவாக நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார். தேர்வாணையத்தின் செயலாளர் பரமேஷ்வர் ராம், ” தேர்வு விடைகள் கசிந்ததாக எந்த மையத்தில் இருந்தும் எங்களுக்கு அறிக்கை வரவில்லை. வாட்ஸப்பில் விடைகள் வெளியாகியுள்ளதாக வரும் செய்தி வதந்தி” என தெரிவித்துள்ளார்.
முசாபார்பூர் மாவட்டத்தில் சுமார் 21 தேர்வாளர்கள் வினாதாளுடன் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...