நீதிமன்றத்தில் சரணடைவதற்காக, போயஸ் கார்டனில் இருந்து பெங்களூரு
செல்வதற்கு முன்பாக மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று
மரியாதை செய்த சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் கண்கலங்க மவுனமாக நின்று
மரியாதை செய்து கொண்டிருந்த பின்னர் சமாதியை தொட்டு வணங்கியபோது, திடீரென
சமாதியின்மீது தனது கையை ஓங்கி அடித்து சபதம் செய்தார்.
உடல்நிலையை காரணம் காட்டி நீதிமன்றத்தில் சரணடைய 2 வாரங்களுக்கு அனுமதி கோரி சசிகலா விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் அவரை உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.
சொத்துகுவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்து. மேலும், குற்றவாளிகள் உடனடியாக பெங்களூரு நீதிமன்றத்தில் சென்று சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டது.
முன்னதாக, நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் சசிகலா அதிமுக சட்டமன்ற உறுபினர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கி இருந்தார். தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா என்னை அழைத்துச் செல்வதுக்கு கர்நாடக போலீஸ் வரும்வரை தான் இந்த இடத்தைவிட்டு வரமாட்டேன் என்றும் அவர்கள் வரும்வரை தன்னால் போயஸ்கார்டனுக்கு செல்ல முடியாது என்று வாக்குவாதம் செய்த பின்னர் இரவு 9.3௦ மணிக்குமேல், அதன் பின்னர் சசிகலா அங்கிருந்து போயஸ்கார்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். போயஸ்கார்டனுக்கு புறப்பட்ட சசிகலா கர்நாடக நீதிமன்றத்தில் நேரடியாக சரணடையவாரா அல்லது கர்நாடக காவல்துறையினர் வந்து இவரை அழைத்து செல்வார்களா ? என்பதில் பெரும் குழுப்பம் இருந்தது.
இந்நிலையில் சீனியர் சிட்டிசன் என்பதை காரணம் காட்டி நீதிமன்றத்தில் சரணடைய 2 வாரங்களுக்கு அனுமதி கோரி சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதனை உச்சநீதிமன்றம் அதிரடியாக மறுத்ததோடு, அவரை உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.
முன்னதாக நேற்றிரவு எம்.எல்.ஏ.க்கள் , அதிமுகவினர் முன்னிலையில் சசிகலா பேசுகையில், நீங்கள் யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அதிமுக தொண்டர்கள் தைரியமாகச் செயல்பட வேண்டும். ஒருவர் 10 பேரின் பணியைச் செய்ய வேண்டும். நான் எங்கிருந்தாலும் அதிமுகவையும் உங்களையும் நினைத்துக் கொண்டே இருப்பேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை பிரமாண்டமாக அமைப்பது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராமாவரம் தோட்டத்தில் வளைவு அமைப்பது ஆகிய பணிகளை அதிமுகவினர் செய்ய வேண்டும். தாற்காலிகமானதுதான்: எனக்கு வந்துள்ள பிரச்னை தற்காலிகமானதுதான். அதை சமாளிக்க என்னால் முடியும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு உள்ளது. அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்றார் அண்ணா. அதேபோன்று துணிச்சலுடன் செயல்பட வேண்டியதைத்தான் எம்ஜிஆரின் திரைப்பட பாடல்களும் கூறியுள்ளன. எனவே அதிமுக தொண்டர்கள் எப்போதும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். தர்மத்துக்கு சோதனை வரும்; சோதனையை வெல்வோம். நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்''
"எத்தனையோ வற்புறுத்தல்கள், அழுத்தங்கள் வந்தாலும் என்னை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதும் எங்கள் மீதும் இந்த வழக்கை சுமத்தி இப்போது தண்டனை பெற்றுத் தந்ததே திமுகதான். திமுகதான் இந்த வழக்குக்கு காரணம். இந்த வழக்கு தாக்கல் செய்த பிறகு பல முறை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மக்கள் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக பேரவை உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு உள்ளது. கூடிய விரைவில் ஆட்சி அமைப்போம். சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை வைப்போம். அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் தி.மு.க. என்ற ஒரு கட்சி இருக்கக் கூடாது என்றார் சசிகலா.
இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் சரணடைவதற்காக, சசிகலா போயஸ் கார்டனில் இருந்து சசிகலா கார் மூலம் பெங்களூரு செல்வதற்கு முன்பாக மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்தார். முன்னதாக, போயஸ்கார்டனில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக போயஸ் இல்லத்தில் உள்ள ஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதையை செலுத்தினார்.
அதன் பின்னர் மெரினா சென்ற சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் கண்கலங்க மவுனமாக நின்று மரியாதை செய்து கொண்டிருந்த சசிகலா, பின்னர் சமாதியை தொட்டு வணங்கியபோது, திடீரென சமாதியின்மீது தனது கையை ஓங்கி அடித்து சபதம் செய்தார். அதனைக்கண்டு ஏராளமான அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதைதொடர்ந்து சசிகலா ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர், சசிகலா அங்கிருந்து புறப்பட்டு இன்று மாலைக்குள் பெங்களூர் 48 நகர நீதிமன்றத்தில் ஆஜராக செலவதற்காக புறப்பட்டுச் சென்றார். பெங்களூர் நீதிமன்றம் செல்லவுள்ள சசிகலாவிற்கு ஓசூர் வரை தமிழக காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க உள்ளனர். பின்னர் ஓசூரில் இருந்து பெங்களூர் நீதிமன்றம் வரை பெங்களூர் காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...