மதுரை அரசு சட்டக்கல்லூரியில் சட்ட மேற்படிப்பில் அனைத்துப்
பாடப்பிரிவுகளையும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஓராண்டிற்குள் மேற்கொள்ள
சட்டத்துறை முதன்மைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
புதன்கிழமை உத்தரவிட்டது.
முதுகலை சட்டப்படிப்பில் வியாபாரம், அரசியலமைப்பு, மனித உரிமைகள்,
சுற்றுச்சூழல், குற்றவியல் உள்ளிட்ட 9 பாடப் பிரிவுகள் உள்ளன. ஆனால்,
மதுரை சட்டக்கல்லூரி முதுகலை படிப்பில் சொத்துக்கள் தொடர்பான சட்டப்பிரிவு மட்டுமே உள்ளது. இதனால் வழக்குரைஞர்கள் பலர் முதுகலைக் கல்வி பயிலாமல் உள்ளனர். எனவே மதுரை சட்டக்கல்லூரியில் முதுகலை சட்டப்படிப்பில் அனைத்து பாடப்பிரிவுகளையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று சிவகங்கை மாவட்டம் பனங்காடியைச் சேர்ந்த என்.ஜெயராம் சித்தார்த் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை சட்டக்கல்லூரியில் முதுகலைப் படிப்பில் 9 பாடப்பிரிவுகளையும் சேர்ப்பதற்கு ஓராண்டிற்குள் நடவடிக்கைகளை எடுக்க சட்டத்துறை முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...