புதிய
வாக்காளார்களுக்கு, வண்ண வாக்காளர் அடையாள அட்டையை தற்போது தமிழக தேர்தல்
ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை
சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி புதிய வாக்காளர்களுக்கு
இ-சேவை மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளாம் என அறீவித்துள்ளார்.
தமிழக
வாக்காளர் பட்டியலில் கடந்த ஆண்டு சுருக்க முறை திருத்தப் பணிகள் நடந்து
முடிந்ததையடுத்து கடந்த மாதம் ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்
வெளியிடப்பட்டது. அதில், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்த
வாக்காளர்கள் 15 லட்சத்து 26 ஆயிரத்து 985 பேராகும். அவர்களில் 2 லட்சத்து
32 ஆயிரத்து 974 வாக்காளர்கள் தங்கள் செல்போன் எண்களை பதிவு செய்துள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்காக இந்த எண்களுக்கு எஸ்.எம்.எஸ்.
அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த
எஸ்.எம்.எஸ்.சுடன் பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப்படும். அருகில் உள்ள பொது
இ-சேவை மையங்களில் அந்த பாஸ்வேர்டை காட்டி, வண்ண வாக்காளர் அடையாள அட்டையை
இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த இலவச சேவையை பெற விரும்பினால், புதிய
வாக்காளர்கள் தங்களுடைய செல்போன் எண்ணை ‘1950’ என்ற எண்ணுடன் தொடர்பு
கொண்டு பதிவு செய்யலாம். பின்னர் அந்த எண்களுக்கும் எஸ்.எம்.எஸ்.
அனுப்பப்படும். அதனோடு வரும் பாஸ்வேர்டை அரசு இ-சேவை மையங்களில் காட்டி,
இலவசமாக புதிய வாக்காளர் அட்டையை பெறலாம் என கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...