தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான
14 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பாதுகாப்புத் துறைக்கு நிலம் ஒதுக்கப்படும். அப்படி ஒதுக்கப்பட்ட நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆக்கிரமிப்பு செய்து
விட்டதாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விட்டதாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து வழக்கறிஞர் எஸ்.என்.பரத்வாஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், 1997 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 6 ஆயிரத்து 903 ஏக்கர் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன.இவை, 2009 ஆம் ஆண்டு 14 ஆயிரத்து 539 ஏக்கராக உயர்ந்துள்ளது. எனவே,இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கே.எஸ். கேஹர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த அதிகார மையத்தை உருவாக்கி,உடனடியாக அரசுக்கு சொந்தமான 14 ஆயிரம் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...