ஆவின் எம்.டி.யாக பணியாற்றி வருபவர் சுனில் பாலிவால். இவர் இப்பதவிக்கு
வந்தது முதல், பால் விநியோகம், பணி நியமனம் உள்பட பல்வேறு முறைகேடுகளில்
ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதில் மாவட்ட ஒன்றியங்களில்
இருந்து சென்னைக்கு லாரியில் கொண்டு வரப்படும் பால் வழியிலேயே
மாற்றப்பட்டு, அதற்கு பதில் தண்ணீர் கலந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் சிக்கிய அமைச்சர்
ஒருவரே பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக , திண்டிவனம் அருகே லாரி டிரைவர், ஒப்பந்ததாரர் வைத்தியநாதன்
ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விஷயத்தில் வைத்தியநாதனுக்கு உடந்தையாக
இருந்த 26 நபர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பால் கலப்பட
வழக்கு விசாரணை கடந்த 2014ம் ஆண்டு முதல் விழுப்புரம் நீதிமன்றத்தில்
நடந்து வருகிறது.
இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆவின் எம்.டி. சுனில் பாலிவாலிடம் விசாரணை மேற்கொண்டபோது, பால் கலப்பட விவகாரம், தான் ஆவின் எம்.டியாக பதவி ஏற்பதற்கு முன்பிருந்தே நடந்து வந்துள்ளது. தனக்கு முன் ஆவின் எம்.டி.யாக இருந்த அபூர்வ வர்மாவுடன் நெருங்கிய நட்புடன் வைத்தியநாதன் இருந்ததாக சுனில் பாலிவால் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த அபூர்வ வர்மா தான் கடந்த 2013ம் ஆண்டு முதல் உள்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுனில்பாலிவால் மத்திய அரசு பணிக்கு செல்ல அரசிடம் கோரியுள்ளார். ஆவின் கலப்பட வழக்கு முடியும் வரை, சுனில் பாலிவால் மத்திய அரசு பணிக்கு செல்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...