'தமிழ்
தெரியாத ஆசிரியர்களுக்கு, விதிகளை மீறி, கல்வித்துறையில் பதவி உயர்வு
வழங்கக் கூடாது' என, ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு
துறைகளில், தமிழில் தேர்ச்சி பெறாத, தமிழ் தெரியாத ஊழியர்களுக்கு,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம், தமிழ்
தேர்ச்சி தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, பள்ளி கல்வித்துறையில்,
ஆசிரியராக சேரும், பிறமொழி ஆசிரியர்கள், தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற, விதிகள் உள்ளன.
இந்நிலையில், பல ஆண்டுகளாக தமிழில் தேர்ச்சி பெறாத, பிறமொழி ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடக்க கல்வி துறையில், தமிழ் தெரியாதோருக்கு, பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி மற்றும் பள்ளிப்பட்டு ஒன்றியங்களில், 250 ஆசிரியர்கள் தமிழ் தேர்ச்சி பெறாமல், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் கூறுகையில், 'விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து, அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். தமிழில் தேர்ச்சி
பெறாதோருக்கு, உடந்தையாக செயல்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

There are nearly 100 telugu
ReplyDeleteteachers get salary and promotion against the government orders in pallipattu block many years
உண்மை
ReplyDelete