சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சசிகலா மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. உச்ச
நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதை முன்னிட்டு பெங்களூர் நீதிமன்றம் குற்றவாளிகளை அழைத்து வர எஸ்கார்ட் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து சசிகலாவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து எஸ்கார்ட் வாகனம் உடனடியாக புறப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது.
தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் கூவத்தூர் ரிசார்ட்டில் இருக்கும் சசிகலாவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதிலும் 80,000 காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாகனம் மூலம் சசிகலாவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதில் ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் இருக்கும்பட்சத்தில் அவரை விமானம் மூலம் அழைத்துச் செல்லவும் காவல் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால், சசிகலாவை வாகனம் மூலமாகவே நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதனால் சசிகலா பெங்களூர் அழைத்துச் செல்லப்படும் பாதையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் கலவரங்களும் ஏற்படாமல் இருக்கும் வகையில் காவல் துறையினர் அதிகளவில் பாதுகாப்புப்பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...