*ஆளுநரின் முன்னால் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? எந்தெந்த சூழலில்களில் எப்படி முடிவுகள் எடுக்கப்படலாம்?*
* சூழல் 1 - சொத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சசிகலாவை விடுதலை செய்தால், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால், அவர் முதலமைச்சராவதில் எந்த சிக்கலும் இருக்காது.
* சூழல் 2 - தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக வரும் பட்சத்தில், சசிகலா-ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு
ஒருவரை தேர்ந்தெடுத்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். பன்னீர்செல்வம் தரப்பில் ஆட்சேபம் எழாத பட்சத்தில், ஆளுநர் உடனடியாக அந்த நபருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கலாம்.
* சூழல் 3 - வேறு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பன்னீர்செல்வம் தரப்பு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களிடமே பெரும்பான்மை இருப்பதாக கூறலாம். அப்படி கேட்கும் பட்சத்தில், ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் என்ற அடிப்படையில், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல் வாய்ப்பு பன்னீர்செல்வத்திற்குதான் வழங்கப்படும்.
* சூழல் 4 - பன்னீர்செல்வத்திடம் முதல் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், சசிகலா தரப்பில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு என்று வந்தாலே, சபாநாயகரின் பங்கு மிக முக்கியமாகிறது. ஏதேனும் ஒரு தரப்பினர் சபாநாயகரின் மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துவிட்டால், அதன் மீது முடிவு எடுக்காமல் எந்த நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்த முடியாது என்று அருணாசல பிரதேச வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
* சூழல் 5 - இரு தரப்பினருக்கும் மோதல்கள், குதிரை பேரம், போன்ற குற்றச்சாட்டுகள் அதிமாக எழுந்து, சட்டமன்றத்தை அமைதியாகவும் நியாயமாகவும் நடத்த முடியுமா என்ற சந்தேகம் ஆளுநருக்கு வரலாம். அந்த சூழலில், குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யலாம். அப்படி ஒரு பரிந்துரையை செய்யும் முன், அமைதியான வாக்கெடுப்பை ஏன் நடத்த முடியாது என்பதற்கு சரியான காரணங்களை ஆளுநர் விளக்க வேண்டும்.
* சூழல் 6 - குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால், உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த ஆணையிடலாம். குடியரசு தலைவர் ஆட்சி வராத சூழலில், நீதிமன்றம் தலையிடாது.
* சூழல் 7 - சொத்து வழக்கு தீர்ப்பில், ஒரு நீதிபதி விடுதலை என்றும் மற்றொருவர் தண்டனை என்றும் கூறினால், வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும். அந்த புதிய அமர்வு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிடலாம். அப்படி ஒரு தேதி நிர்ணயிக்கப்படும் பட்சத்தில், தற்போதைய நிலையே தொடரும்.
* சூழல் 8 - எந்த தேதியும் நிர்ணயிக்கப்படாமல், வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டால், ஆளுநர் உடனடியாக முடிவு எடுக்கவேண்டிய சூழல் ஏற்படும். அப்போதும், ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் என்ற அடிப்படையில், பெரும்பான்மையை நிரூபிக்கும் முதல் வாய்ப்பு பன்னீர்செல்வத்திற்கு செல்லும். அவர் பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சியில் தொடரலாம்.
* சுழல் 9 - 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கும் தேதி உறுதியாக தெரியாத நிலையில், பன்னீர்செல்வம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், ஆளுநர் 2 விதமாக முடிவு எடுக்கலாம். ஒன்று, சசிகலாவிற்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் அவரையே முதலமைச்சராக்கலாம். அல்லது, புதிய அமர்வின் தீர்ப்பை எதிர்நோக்கி இருப்பதால், சசிகலா தரப்பிலிருந்து வேறு ஒரு நபரை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...