பொதுவாக ரயில், பஸ் போன்றவற்றில் தான் ஸ்டாண்டிங் நிலையில் பயணிகள்
செல்வார்கள். ஆனால், பாகிஸ்தான் விமானத்தில் 7 பேர் ஸ்டாண்டிங் பயணிகளாக
சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து, சவுதி அரேபியாவின் மதீனா நகருக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்றது.இந்த விமானத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, அளவுக்கு அதிகமான அளவில் பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர் என, பாகிஸ்தானின் டான் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இது குறித்த விசாரணையில், குறிப்பிட்ட பயணிகள் எண்ணிக்கைக்கு அதிகமாக 7 பேர் அந்த விமானத்தில் சென்றதும், அவர்களுக்கு கையால் எழுதப்பட்ட டிக்கட் வழங்கப்பட்டுள்ளது என்றும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, இது குறித்து விசாரணை நடந்து வருகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...