Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மன அழுத்தத்தில் 5 கோடி இந்தியர்கள்!!

      5 கோடி இந்தியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது ஐ.நா., ஆய்வில் தெரியவந்துள்ளது. மன அழுத்தத்திற்கு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


4.5 சதவீதம்:

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் 32.2 கோடி மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய பசிபிக் பிராந்தியத்தில் வசிக்கின்றனர். கடந்த 2005 முதல் 2015 வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2015ல் இந்தியாவில் மன அழுத்தத்தால் 5,66,75,969 பேர் பாதிக்கப்பட்டனர். இது இந்திய மக்கள் தொகையில் 4.5 சதவீதம் ஆகும்.

தற்கொலை:

கடந்த 2015ல் உலகம் முழுவதும் 7,88,000 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இன்னும் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்தனர். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் தான் சர்வதேச அளவில் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டனர். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தான் கடந்த 2015ம் வருடம் 78 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொண்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive