18 லட்சம் பேர் டிபாசிட் செய்துள்ள கணக்கில் வராத பணம்... ரூ.4.7 லட்சம் கோடி,விளக்கம் கேட்டு 13 லட்சம் பேருக்கு இ - மெயில், எஸ்.எம்.எஸ்.!!!
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், நாடு முழுவதும், 18 லட்சம்
வங்கிக் கணக்குகளில், 4.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, கணக்கில் வராத
பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, இவர்களிடம், இ - மெயில், எஸ்.எம்.எஸ்., மூலம் விளக்கம் கேட்டுள்ள வருமான வரித்துறை, 'சரியான பதில் தராவிட்டால், பணம் பறிமுதல் செய்யப்படும்' என, எச்சரித்துள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, மத்திய அரசு, 2016, நவ., 8ல் வெளியிட்டது. இந்த நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய் வதற்கு, 2016, டிச., 30 வரை, கால அவகாசம் தரப்பட்டது.இந்த காலக்கெடு முடிந்த உடன், அது குறித்த விசாரணையில் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை என, பல்வேறு அமைப்புகள் தீவிரமாக இறங்கின.
தங்கள் வருவாய் என, வருமான வரித்துறைக்கு காட்டிய கணக்கைவிட, அதிக அளவில் டிபாசிட் செய்துள்ள, 18 லட்சம் வங்கிக் கணக்குகள் முதற்கட்டமாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில் மட்டும், 4.7 லட்சம் கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த, வங்கி கணக்கு வைத்துள்ள, 18 லட்சம் பேருக்கு, விளக்கம் கேட்டு, வருமான வரிதுறை தகவல் அனுப்பி வருகிறது. இ - மெயில், எஸ்.எம்.எஸ்., என, பல்வேறு வழிகளை, வருமான வரித் துறை இதற்காக பயன்படுத்தி வருகிறது.இதுவரை, 13 லட்சம் பேருக்கு
தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களுக்கு தகவல் அனுப்பும் பணி நடந்துவருவதாகவும், வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.தங்கள் வங்கிக் கணக்கில் செலுத் தப்பட்ட, பழைய, செல்லாத ரூபாய் நோட்டு டிபாசிட் கள் குறித்த, சரியான, ஏற்கக் கூடிய விளக்கத்தை அளிக்காத பட்சத்தில், அந்த பணம் பறிமுதல் செய் யப்படும் என, வருமான வரி துறை எச்சரித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...