நாடு முழுவதும் விமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில்,
செயல்படாத நிலையில் உள்ள 43 விமான நிலையங்கள் விரைவில் செயல்படுத்தப்பட்டு
விமான போக்குவரத்து தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை செயலர் சவுபே கூறுகையில்,
"தற்போது இந்தியா முழுவதும் வர்த்தக ரீதியாக 70க்கும் மேற்பட்ட விமான
நிலையங்கள் இயங்குகின்றன. விமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்காக,
செயல்படாத நிலையில் உள்ள 43 விமான நிலையங்கள் விரைவில் இயக்கப்படும்.
இதற்காக 11 பேர் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர். இன்னும் 20 நாளில் இதற்கான
வழித்தட அனுமதி விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
இன்னும் 6 மாதத்தில் இந்த விமான நிலையங்களில் விமான போக்குவரத்து தொடங்கும். இந்த வழித்தடங்களில் ஒரு மணி நேர பயணத்துக்கான கட்டணம் ரூ.2500க்கு மேல் இருக்காது. சர்வதேச அளவில் எண்ணெய் விலை குறைந்துள்ளதால், விமான கட்டணத்தை 30 சதவிகிதம் வரையில் விமான நிறுவனங்கள் குறைத்துள்ளன. இந்நிலையில் விமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் எடுத்துள்ளது “ என்று கூறினார்.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் கூறுகையில், “இந்தியாவிலுள்ள 400 விமான நிலையங்களில் வெறும் 75 நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இது கவலையளிப்பதாக உள்ளது” என்றார். அரசு வெளியிட்டிருந்த தகவலின்படி, கடந்த ஆண்டில் மட்டும் இந்திய விமானப் பயணிகளின் எண்ணிக்கை முந்தைய 2015ஆம் ஆண்டைக்காட்டிலும் 2016ல் 20 சதவிகிதம் உயர்ந்து 22 கோடியாக உயர்ந்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...