ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை திருடி, அதை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கி, மும்பையை தலைமையிடமாகக் கொண்ட சுவிதா இன்போசர்வ் மற்றும் பெங்களூருவை சேர்ந்த இமுத்ரா ஆகிய நிறுவனங்களிடம் இது தொடர்பாக
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தி, ஏராளமானோரின் வங்கி கணக்குகளில் இருந்து இவர்கள் பணப்பரிமாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது.
2016 ஜூலை 14 முதல் 2017 பிப்ரவரி 19 வரை ஒரே நபர் 397 பயோமெட்ரிக் தகவல்களை பயன்படுத்தி பணபரிவர்த்தனை செய்துள்ளார். ஆக்சிஸ் வங்கி மூலம் 194 பரிவர்த்தனைகளும், இமுத்ரா மூலம் 112 பரிவர்த்தனைகளும், சுவிதா இன்போசர்வ் மூலம் 91 பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...