கடந்த 3 ஆண்டுகளில் 39 எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ‛சாகித்ய
அகாடமி' விருதைத் திருப்பியளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
39 விருதுகள்:
இதுகுறித்து கேள்வி ஒன்றிற்கு லோக்சபாவில் பதிலளித்த மத்திய கலாசார துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்ததாவது: எழுத்தாளர்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பல எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 39 எழுத்தாளர்கள் விருதினை திருப்பி அளித்துள்ளனர்.
280 பேருக்கு..
இம்முடிவை திரும்பப்பெற வேண்டி இருமுறை சாகித்ய அகாடமி கூட்டம் நடைபெற்றது. இதனை ஏற்று ராஜஸ்தானை சேர்ந்த எழுத்தாளர் நந்த் பரத்வாஜ் என்பவர் மட்டும் தனது முடிவை மாற்றியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 280 பேருக்கு சாகித்ய அகாதெமி விருது அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...