''நிலையான ஆட்சி அமைந்துவிட்டது; கோரிக்கைகளை நிறைவேற்ற, இரண்டு
மாதம் அவகாசம் கொடுங்கள்,'' என, 'பென்ஷன்' கேட்டு போராடிய, போக்குவரத்து
கழக ஓய்வூதியர்களிடம், அமைச்சர் விஜயபாஸ்கர் கெஞ்சினார்.
தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் பணியாற்றிய ஓய்வூதியர் களுக்கு,
மூன்று மாதங்களாக பென்ஷன் கிடைக்கவில்லை. ஓராண்டாக, ஓய்வு பலன்களும்
கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஓய்வூதியர்கள், நேற்று
குடும்பத்தினருடன், சென்னை, பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டனர்.அவர்களுடன்,
அதிகாரிகள் பேச்சு நடத்தினர். 'அமைச்சர் வந்து உறுதி அளித்தால் தான்,
போராட்டத்தை கைவிடு வோம்' என, விடாப்பிடியாக கூறினர். வேறு வழியின்றி,
நேற்று மாலை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவர்களுடன் பேச்சு
நடத்தினார். அப்போது, ''இதுவரை நிலையான அரசு இல்லாததால், சிக்கல்
வந்துவிட்டது. தற்போது, நிலையான அரசு அமைந்து உள்ளது. ''இரு மாதங்கள்
அவகாசம் கொடுங்கள்; உங்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருகிறேன்;
அதன்பின், உங்களுக்கு எந்த குறையும் இருக்காது,'' என, அமைச்சர் கெஞ்சினார்.
இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகக் கூறி,
ஓய்வூதியர்கள் கலைந்து சென்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...