கொல்கத்தா,பிப்.20 (டி.என்.எஸ்) பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேர்
இந்தியாவின் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் போலிகளை அச்சடித்து
வைத்திருப்பதாகவும், அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தின் வழியாக அவற்றை
இந்தியாவில் புழக்கத்தில் விடவும் அவர்கள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை
எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 3 மாதங்களாக இந்த கள்ள நோட்டு அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ள அவர்கள் சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் இறக்குமதி செய்வதற்கான அடித்தளமாக மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டம் விளங்குவதாக உளவுத் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். இலங்கை, நேபாளம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் வழியாகவும் இந்தியாவுக்கு கள்ளநோட்டுகள் கடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2,000 நோட்டை போலியாக அச்சிட முடியாத வகையில் இந்திய ரிசர்வ் வங்கி சில பாதுகாப்பு அம்சங்களை கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...