பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ’டாப்ஷீட்’ உடன் விடைத்தாள் தைக்கும் பணி, நேற்று துவங்கியது.
தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது.
தேர்வில் குளறுபடிகளை தவிர்க்க, பல்வேறு மாற்றங்களை அரசு தேர்வுத்துறை
கொண்டு வந்துள்ளது.
அதன்படி, விடைத்தாளில் மாணவர் புகைப்படம், பார்கோடு, சீரியல் எண், ரகசிய
குறியீடு, தேதி, பாடம், மதிப்பெண் பட்டியல் அடங்கிய, ’டாப்ஷீட்’
அறிமுகப்படுத்தப்பட்டது. அவை, விடைத்தாளுடன் இணைக்கப்பட்டு, கடந்த, மூன்று
ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தாண்டும், கல்வி மாவட்டங்களுக்கு, 10 நாட்களுக்கு முன், பிளஸ் 2
மற்றும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கான விடைத்தாள்கள் அனுப்பி
வைக்கப்பட்டன. அங்கிருந்து, கடந்த வாரம், தேர்வு மையங்களுக்கு
அனுப்பப்பட்டன.
தொடர்ந்து, ’டாப்ஷீட்’ உடன், விடைத்தாள் இணைத்து தைக்கும் பணி,
நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.
இரண்டு தையல் இயந்திரங்கள் மூலம், அப்பணி முழுவீச்சில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. ’பணிகள், மூன்று நாட்களுக்குள் முடிக்க
திட்டமிடப்பட்டுள்ளது’ என, தலைமையாசிரியர் அல்லிமுத்து கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...