Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

+2 வணிகவியல் பாடத்திற்கு இலவச டிவிடி மெட்டிரியல்- அசத்தும் கரூர் ஆசிரியர் திரு .கார்த்திகேயன்



+2 வணிகவியல் பாடப்பொருளை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் டிவிடி வடிவில் தயாரித்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன் என்பவர்  வெளியிட்டுள்ளார்.இது ஆசிரியர்கள், மாணவர்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 வணிகவியல் பாட ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வணிகவியல் பாடத்திற்கான இந்த டிவிடி மெட்டிரியல் வெளியிடப்பட்டது.



இந்த வீடியோ மெட்டிரியலை தயாரித்து வழங்கிவரும் கரூர் மாவட்டம் ஈசநத்தம் அரசுமேல்நிலைப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன் இது குறித்து நம்மிடையே பேசுகையில்..,
"கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் 100% தேர்ச்சியும், பல மாணவர்களை 200க்கு 200 மதிப்பெண்கள் பெறவைத்தும் வருகிறேன்.முன்பு கோடைபண்பலை வானொலியில் அறிவிப்பாளராகவும், தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவத்தோடு புதிய தொழில்நுட்பங்களோடு  புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு பாடங்களை நடத்திவருகிறேன்.
எனது மாணவர்களுக்கு  வணிகவியல் பாடம் தொடர்பாக எனது குரலில் பேசி நானே தயாரித்த வீடியோக்கள் மூலமாக பாடங்களை நடத்தி , தேர்ச்சி விழுக்காட்டிலும் நல்ல முன்னேற்றம் கண்டேன்.அதை  ஒரே டிவிடி தொகுப்பாக்கி அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் இலவசமாக வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பாடப்பொருளை உள்ளடக்கிய இந்த டிவிடியை சேவை நோக்கோடு  வழங்கி வருகிறேன்.

பாடப்பொருளை படமாக பார்ப்பதால்  படிப்பதில் மாணவர்களின் ஆர்வம் கூடும் என்பதோடு பாடத்தையும்  அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் என்பது எனது பள்ளி மாணவர்கள் மூலம் கிடைத்த அனுபவம்.

அனைத்து அரசுபள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற்காகவே இந்த டிவிடியை எனது சொந்த செலவில் தயாரித்து வழங்கிவருகிறேன்.இந்த டிவிடி தேவைப்படுவோர் 9943149788 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் எனது கல்வி தொடர்பான வீடியோக்களை Karthikeyancommerceஎன்ற யூடியூப் சேனலை Subscribe செய்வதன் மூலமாக பார்க்கலாம். விரைவில் கணக்குப்பதிவியல் பாடத்திற்கும் இதே   போன்று டிவிடி மெட்டிரியலை வெளியிடவுள்ளேன்"என்றார்.




1 Comments:

  1. Done a good job, u r blessed with people who finanancialy down & blind students, congratulations for ur future arrangements we r ready to support ur projects... Thx & regards Latha arunkumar (Tv fame)

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive