ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் காலியாக உள்ள 1174
பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தொடர்பான
அறிவிப்பை கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம்(யூபிஎஸ்சி) வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த
ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்.
இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளியானது.
இதைத்தொடர்ந்து முதன்மைத் தேர்வு கடந்த டிசம்பர் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்தது. 15 ஆயிரம் பேர் எழுதினர். தமிழகத்தில் 954 பேர் எழுதினர். இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்றிரவு யூபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் 2961 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு மார்ச் 20ம் தேதி நடக்கிறது. இதன் முடிவுகள் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து. இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...