நீதிபதிகள் ஓய்வு
சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், 57
நீதிபதிகள் தற்போது உள்ளனர். 18 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
தற்போது பணியில் உள்ள 57 நீதிபதிகளில், 10 பேர் வருகிற ஜூன் மாதத்துக்குள்
அடுத்தடுத்து ஓய்வு பெறுகின்றனர். எனவே, வருகிற ஜூன் மாதத்துக்கு பின்னர்
நீதிபதிகளின் எண்ணிக்கை 47 ஆக குறைந்துவிடும்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு 21 பேரை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்துள்ளது.
11 வக்கீல்கள்
இதில் 11 வக்கீல்கள், 10 மாவட்ட நீதிபதிகள் ஆவார்கள். கடந்த டிசம்பர் மாதம் மாவட்ட முதன்மை நீதிபதிகளாக தற்போது பணியாற்றி வரும் ராஜதிலகம், தரணி, ராஜமாணிக்கம், வாசுதேவன் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு தேர்வு செய்தது. பின்னர், இந்த 4 பேரையும் ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்த குழு பரிந்துரை செய்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம், வக்கீல்கள் பி.டி.ஆஷா, சுப்பிரமணிய பிரசாத், செந்தில்குமார், இளவழகன், எமலியாஸ், புகழேந்தி, சரவணன், ஆனந்த்வெங்கடேஷ், நிர்மல்குமார், ராமசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை மூத்த நீதிபதிகள் தேர்வு செய்து, சுப்ரீம் கோர்ட்டுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மாவட்ட நீதிபதிகள்
தற்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலும் 6 மாவட்ட நீதிபதிகளின் பெயரை, ஐகோர்ட்டு நீதிபதி பதவிக்கு, ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு தேர்வு செய்து, பரிந்துரை செய்துள்ளது.
அந்த பரிந்துரை கடிதத்தில், மாவட்ட நீதிபதிகளாக தற்போது பணியாற்றி வரும் சரோஜினிதேவி, ஸ்ரீவள்ளி, ஜாகீர்உசேன், பொங்கியப்பன், ஹேமலதா, அருள் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு ஐகோர்ட்டு நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட வக்கீல்களின் பெயர்கள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மத்திய சட்டத்துறையின் பரிசீலனையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், மேலும், 21 பேர் பெயர் ஐகோர்ட்டு நீதிபதிக்கு பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...