Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2016-2017-ஆம் ஆண்டின் வருமான வரி விகிதங்கள் விவரம்..!

நடப்பு நிதியாண்டில், அதாவது 2016-17ஆம் ‌ஆண்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களை தெரிந்து கொள்வோம்.
இதில் இன்று மாற்றம் செய்யப்பட்டால், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், அதாவது அடுத்த நிதியாண்டில் அமலுக்கு வரும். தற்போதைய நிதியாண்டில்,
*ஆண், பெண் இருபாலருக்கும் ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய் வரை வரி இல்லை.
*இரண்டரை லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை வருமானத்துக்கு 10 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. 5 லட்சத்தில் இருந்து 10 லட்ச ரூபாய் வரை வருமானத்துக்கு 20 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.
*10 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள வருமானம் முழுவதற்கும் 30 சதவிகித வரி செலுத்த வேண்டும்.
*இந்த 3 பிரிவுகளில் செலுத்தப்படும் வரித் தொகை மீது 2 சதவிகித கல்வி வரி, 1 சதவிகித கல்விக் கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது.
*60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை வரி இல்லை.
*3 லட்சத்துக்கு மேல் 5 லட்ச ரூபாய் வரை 10 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.
*5 லட்சத்துக்கு மேல் 10 லட்ச ரூபாய் வரை 20 சதவிகிதமும், 10 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவிகிதமும் வருமான வரி செலுத்த வேண்டும். வரித் தொகை மீது 2 சதவிகித கல்வி வரி, 1 சதவிகித கூடுதல் உயர்கல்வி வரி ஆகியவை மூத்த குடிமக்களுக்கும் பொருந்தும்
*80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கு 5 லட்ச ரூபாய் ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது
*5 லட்சம் முதல் 10 ‌லட்ச ரூபாய் வரை 20 சதவிகித வரியும், 10 லட்ச ரூபாய்க்கு மேல் 30 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும். கல்விக்கான வரிவிதிப்புகள் இவர்களுக்கும் பொருந்தும்
வருமான வரி விகிதங்கள் இவ்வாறு இருப்பிலும், மொத்த வரித் தொகையில் 5 ஆயிரம் ரூபாய் வரை வரிக்கழிவு அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகும் வரி செலுத்த வேண்டியிருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் ஒன்றரை லட்ச ரூபாய் வரை பல்வேறு சேமிப்பு மற்றும் செலவுக்கான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. காப்பீடு பிரீமியம், குழந்தைகளின் கல்விக் கட்டணம், மியூச்சுவல் ஃபண்ட், வருங்கால சேமிப்பு நிதி, பொது வருங்கால வைப்பு, அஞ்சலக பத்திரங்கள் மற்றும் வீட்டுக் கடனில் திருப்பிச் செலுத்தும் அசல் தொகை ஆகியவை இதில் அடங்கும்.
தவிர, மருத்துவக் காப்பீடு பிரீமியம், தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றுக்கும் முறையே 30,000 மற்றும் 50,000 வரை வரிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும், வீட்டு வாடகையை கழித்துக் கொள்ளவும், வீட்டுக் கடன் வட்டிக்கு 2 லட்ச ரூபாய் வரையும் வரிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது.
இந்த வரிவிலக்குகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வோருக்கு 6 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டிய தேவையில்லாத நிலை உள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive