ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சேவை வழங்குவதால் தொலைத்தொடர்பு துறையின்
வருமானம் 20 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம்
தெரிவித்திருக்கிறது. தவிர அடுத்த நிதி ஆண்டில் டெலிகாம் துறைக்கு எதிர்மறை
குறியீடு வழங்கி இருக்கிறது.
அந்த அறிக்கை மேலும் கூறியிருப்பதாவது: அடுத்த நிதி ஆண்டில் போட்டி அதிகரிக்கும்.
குறிப்பாக ஜியோ வருகை அதற்கு முக்கியமான காரணமாகும். அதனால் எதிர்மறை குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போது சந்தையில் இருக் கும் நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவிடம் சந்தையை இழப் பார்கள். மேலும் டெலிகாம் நிறுவனங்களின் லாப வரம்பும் குறையும், கடன் அளவும் அதிகரிக்கும். மேலும் டேட்டா வுக்கான கட்டணம் குறைவதால், ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் வருமானமும் குறை யும். தற்போது டேட்டா கட்டணம் 20 முதல் 30 சதவீதம் வரை சரிந்திருப்பதால், அதிக நபர்கள் பயன்படுத்தினால் கூட ஒரு நபர் மூலம் கிடைக்கும் வருமானம் 10 சதவீதம் வரை சரியும். வரும் மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 கோடியாக இருக்கும்.
ஆனால் இந்த வாடிக்கை யாளர்களை தக்க வைப்பது, வாடிக்கையாளர் அனுபவம் மற் றும் கட்டணங்களை நிர்ணயம் செய்வதில் இருக்கிறது என இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்திருக்கிறது. தற்போது சந்தையில் இருக் கும் டெலிகாம் நிறுவனங்கள், ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவை இந்த துறையை பாதிப்ப தாக குற்றம் சாட்டினார்கள். பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த லாபம் ஈட்டி இருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...