தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிரப்பப்படவுள்ள 85 பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்று முடிந்தது.
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று கட்டமாக நடைபெறும். இதன் முதற்கட்டமான முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்று முடிந்தது.
தமிழக அரசுத் துறையில் 29 துணை ஆட்சியர், 34 துணை காவல் கண்காணிப்பாளர், 8 வணிக வரித்துறை உதவி கண்காணிப்பாளர், 1 மாவட்ட பதிவாளர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் 8 தீயணைப்பு அதிகாரி என 85 காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி, குரூப்-1 தேர்வுக்காக தமிழகம் முழுவதும் சுமார் 749 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 140 மையங்களில் குரூப்-1 முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இதில் 43836 பேர் தேர்வு எழுதினர்.
சென்னை வேப்பேரியில் தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அருள்மொழி பார்வையிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 3746 பேர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம்பேர் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற முதல்நிலை தேர்வுக்கான ஆன்சர் கீ பிப்-21 முதல் 23க்குள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...