தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, ராஜ்யசபாவில்
கூறியதாவது:
பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் தொலை தொடர்பு சேவை
குறித்து, காலாண்டுக்கு ஒருமுறை, ‘டிராய்’ ஆய்வு செய்து, அது தொடர்பான
அறிக்கையை, வலைதளத்தில் வெளியிடுகிறது. மோசமான சேவை வழங்கும்
நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது.இந்த வகையில்,
அழைப்பு துண்
டிப்பு உள்ளிட்ட சேவை குறைபாடுகளுக்காக, தொலை
தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, 11 கோடி ரூபாய் அபராதம்
விதிக்கப்பட்டு உள்ளது.
அதில், அதிகபட்சமாக, ஏர்செல் நிறுவனத்தின், ‘2ஜி, 3ஜி’ சேவை குறைபாடு களுக்காக, முறையே, 3 கோடி ரூபாய் மற்றும் 1.56 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, பி.எஸ்.என்.எல்., 2.27 கோடி ரூபாய்; ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், 89 லட்சம் ரூபாய்; டாடா டெலிசர்வீசஸ், 84 லட்சம் ரூபாய்; வோடபோன் 40 லட்சம் ரூபாய்; பார்தி ஏர்டெல், 13.5 லட்சம் ரூபாய் என்ற அளவில் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.இதுதவிர, பி.எஸ்.என்.எல்., – வோடபோன் நிறுவனங்களுக்கு, ‘3ஜி’ சேவை குறைபாட்டிற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...