திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 174 பேர்
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று 7
ஆயி ரத்து 345 பேர் மட்டுமே (65%) தேர்வெழுதினர்.
விண்ணப்பித்த வர்களில் 3 ஆயிரத்து 829 பேர் தேர்வில்
பங்கேற்கவில்லை.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
நேற்று தமிழகம் முழுவதும் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,
வணிகவரித் துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பதவிக ளுக்கான குரூப்-1 முதல்நிலைத்
தேர்வை நடத்தியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 மையங்களில் இந்தத் தேர்வுநடந்தது. இந்த தேர்வுக்காக 10 முதன்மை கண்காணிப்பாளர்கள், 176 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும்10 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். திரு வள்ளூர் கோட்டாட்சியர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் தலைமையில் 2 பறக்கும்படை குழுக்களும், 2 நடமாடும் குழுக்க ளும் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தன.திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வை எழுத 3 ஆயிரத்து 524 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 2 ஆயிரத்து 146 பேர் (60.90 சதவீதம்) மட்டுமே தேர்வு எழுதினர். 1,378 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.திருவள்ளூர் அருகே உள்ள மணவாள நகரில் உள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வட்டாட்சியர் கார்க்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் அப்போது உடனிருந்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்காக 7 ஆயிரத்து 650 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு15 தேர்வு மையங்களில் நேற்று தேர்வு நடை பெற்றது. இந்தத் தேர்வில் 2 ஆயிரத்து 451 பேர் பங்கேற்க வில்லை. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 199 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன் மற்றும் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தேர்வை ஆய்வு செய்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...