அரசு
துறைகளில் காலியாக உள்ள, 85 இடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' தேர்வு
நேற்று நடைபெற்றது. இதில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழகத்தில், துணை கலெக்டர் - 29, டி.எஸ்.பி., - 34, வணிக வரித்துறை கமிஷனர் - 8, மாவட்ட பதிவாளர் - ௧, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - ௫, தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி - எட்டு என, 'குரூப் - 1' நிலையில், 85 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' முதல் நிலை தகுதி தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. மொத்தம், 2.17 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். சென்னையில், 146 உட்பட, தமிழகம் முழுவதும், 749 தேர்வு மையங்களில், இந்த முதல் நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், 90 ஆயிரம் பெண்கள் உட்பட, இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்; சென்னையில் மட்டும், 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு அறைகளில், சி.சி.டி.வி., என்ற கண்காணிப்பு கேமரா மூலம், தேர்வர்கள் கண்காணிக்கப்பட்டனர். டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர், சென்னையிலுள்ள தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...