மேஷம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கடனாக
கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.
புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
ரிஷபம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம்
சச்சரவுகளில் சிக்குவீர்கள். குடும்பத்தில் இணக்கமாக செல்லவும்.
அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற
வேண்டுமே என்ற பயம் அடிக்கடி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி
விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
மிதுனம்
திட்டமிட்ட
காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால்
அரவணைத்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். பழைய கடனைத்
தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு
லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
கடகம்
எதையும்
சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். காணாமல் போன
முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
சிம்மம்
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்
கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பயணங்கள்
சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
கன்னி
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில்
அமைதி நிலவும் நிலவும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.
உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத
லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
துலாம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில்
உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.
அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிலரின் ஆசை
வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட
வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
விருச்சிகம்
சவாலான
வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. விலை
உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில்
புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள்
வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
தனுசு
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.
அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில்
அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்
படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
மகரம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்
என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கும்பம்
எதிர்ப்புகளையும்
தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய
கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக
ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
மீனம்
பேச்சில்
முதிர்ச்சி தெரியும். சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால்
பெருமையடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின்
நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில்
தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...