மேஷம்
சின்ன
சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து
பெருமைப்படுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம்
அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ரிஷபம்
சாதிக்க
வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக்
காட்டுவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க
நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.
உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
மிதுனம்
உணர்ச்சிப்பூர்வமாகப்
பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர்
முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.
புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள்
உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
கடகம்
காலை
9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். பிற்பகல்
முதல் கணவன்&மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். புதிய யோசனைகள்
பிறக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்திருந்த
தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் பணிகளை
விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
சிம்மம்
காலை
9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்வது
நல்லது. குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்புகள் வரும். சிலர் உங்களை தாழ்த்துப்
பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். யாரையும்
யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில்
போட்டிகளால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை
எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
கன்னி
மற்றவர்களால்
செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள்.
பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்
கொடுப்பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை
கையாளுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
துலாம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்
என்பதை கண்டறிவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.
நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து
கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
விருச்சிகம்
எதிர்ப்புகளையும்
தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தாழ்வுமனப்பான்மை
நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்
மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
தனுசு
உங்கள்
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து
செயல்படுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில்
ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை
தருவார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
மகரம்
சோர்வு
நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சொந்த&பந்தங்கள் தேடி
வந்துப் பேசுவார்கள். தோற்றப் பொலிவுக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு
மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து
முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கும்பம்
காலை
9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும்.
பிற்பகல் முதல் மனஉளைச்சல், அலைச்சல், சோர்வு யாவும் நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்
உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.
உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மீனம்
காலை
9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சின்ன சின்ன வேலைகளையும்
அலைந்து முடிக்க வேண்டி வரும். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப
விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின்
மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.
உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...