மேஷம்
பால்ய
நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.
புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
ரிஷபம்
துணிச்சலாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப்
பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அரசால்
ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில்
அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
மிதுனம்
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து
விடுபடுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள்
வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
கடகம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக
ஆதங்கப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச
வேண்டாம். லேசாக தலை வலிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த
முயற்சிப்பார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில்
இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
சிம்மம்
சில
காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின்
உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு
காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
கன்னி
திட்டமிட்ட
காரியங்கள் கைக்கூடும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சபைகளில்
மதிக்கப்படுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணவரவு கணசமாக உயரும்.
வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக
முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
துலாம்
உங்களின்
அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.
உறவினர், நண்பர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர்
செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வர
வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப்
பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது
அதிகாரி உங்களை மதிப்பார்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
தனுசு
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும்.
பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை
பயன்படுத்துவது நல்லது. பழைய பகை, கடன் நினைத்து கலங்குவீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில்
அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
மகரம்
பிள்ளைகளின்
பொறுப்புணர்வு அதிகமாகும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
புதியவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்ட
திட்டமிடுவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில
சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள்
தேடி வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
கும்பம்
கனிவாகப்
பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்,
நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
மீனம்
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில்
நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப்
பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில்
அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...