மேஷம்
குடும்பத்தில்
இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.
சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புடன்
பேசுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.
உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். உடல் நலம்
சீராகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள்
வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக
ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
மிதுனம்
இரவு
8.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித
படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும்.
வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை
தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம்
தாமதமாக வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கடகம்
குடும்பத்தினருடன்
வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல்
அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். சகோதர வகையில்
பிணக்குகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். இரவு
8.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
சிம்மம்
புதிய
பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள்
மத்தியில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்
கொடுப்பீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
கன்னி
சாதிக்க
வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள்
ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில்
மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
துலாம்
குடும்பத்தில்
கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள்
கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
விருச்சிகம்
இரவு
8.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க
முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும்
சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உதவிக் கேட்டு தொந்தரவுகள்
அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில்
அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
தனுசு
பிள்ளைகள்
உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.
விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள்
தேடி வரும். இரவு 8.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும்
எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
மகரம்
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால்
நினைத்தை முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
கும்பம்
புதிய
முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால்
ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.
உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
மீனம்
தடைகளை
கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து
நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது யோசிப்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை
சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...