RTE - Act ல் சிக்கித் தவிக்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் TET முழுவிலக்கு எதிர்பார்ப்பு.
TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வுகிடைக்கும் என்று எதிர்பார்த்து அரசு விதிகளின் அடிப்படையில் 23/08/2010க்குப்பிறகு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்இன்றும் காத்துக் கொண்டு உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு நீதி மன்ற வழக்குகள் காரணமாகதமிழகத்தில் நடத்தப்படாமல் இருந்த நிலையிலும் கூட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 23/08/2010க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம்பெற்ற ஆசிரியர்கள் தம் தகுதியை மாணாக்கர்களின் தேர்ச்சி விழுக்காடு மூலம்தகுதியை முழுவதும் நிரூபித்துக் காட்டிக் கொண்டு உள்ளனர்.ஆயினும் தமிழக அரசின் கருணைக் கடைக்கண் பார்வை படவில்லை என்ற மன கஷ்டத்தில்விரைவில் ஒரு நல்ல விடியல் கிடைக்கும் என இன்றும் காத்துக் கொண்டுஇருக்கின்றனர்.
காரணம் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வெளிவந்த நாள் ஆகஸ்டு 23(2010)தமிழகத்தில் 5 ஆண்டுகள் நிபந்தனை அடிப்படையில்தமிழகத்தில் 2016 நவம்பர் 15 ஆம் நாளுக்கு பிறகு இந்தவகை ஆசிரியர்களின்நிலையும் பணியும்....???( கேள்விக்குறி )இதனைகடந்த பல நாட்களாக பல ஊடகங்கள் மற்றும் கல்வி சார்ந்த இணையதளங்கள்நினைவுபடுத்தி வருகின்றன. 23/08/2010 க்குப் பிறகுகடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினைதந்து கொண்டுள்ள இந்த ஆசிரியர்களுக்கு இன்றும் ஆசிரியர் தகுதித் தேர்வைக்காரணம் காட்டி நியாயமாக கிடைக்க வேண்டிய பல உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்இன்றுவரை பணியாற்றி வருகின்றனர்.தமிழகத்தில்பல கல்வி மாவட்டங்களில் இதுவரை கொடுக்கப்பட்ட ஒருசில சலுகைகளும் முன்னறிவிப்புஇன்றி நிறுத்தப்பட்டுள்ளன ...ஒரு சில ஆசிரியர்களுக்கு... இன்று வரை
* வளரூதியம் இல்லை.
* ஊக்க ஊதியம் இல்லை.
* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.
* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.
* மருத்துவ விடுப்புக்கு அனுமதி இல்லை.
* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.
* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.
* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.
* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.
* வரையறை விடுப்புகள் இல்லை.₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒருசில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில் உள்ளனர்.இவை எல்லாவற்றிலும் மேலாக தகுதியற்ற ஆசிரியர்கள் என ஒரு சில பள்ளிகளின் மூத்தஆசிரியர்களால் எள்ளி நகையாடப்படும் சூழலும் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.
தமிழக அரசு கருணை உள்ளத்தோடு, இவர்களின் பிரட்சனைகளை உள்ளார்ந்து பார்க்கும்நிலையில் 23/08/2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்றுள்ள அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்துமுழு விலக்கு அளிப்பது மட்டுமே ஒரே தீர்வு.இவர்களின் ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கை தமிழக அரசின் கல்வி சார்ந்த கொள்கைமுடிவில் மறு பரிசீலனை செய்து அரசு விதிமுறைகளின்படி முறையே பணியில் உள்ள இந்தபட்டதாரி ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருணை உள்ளத்துடன் பார்த்து,ஒரு அரசாணைபிறப்பிக்க வேண்டும் என மாண்புமிகு தமிழக கல்வித் துறை அமைச்சரை நேரில்சந்தித்து மனு கொடுத்து இருந்தனர்.முதன்மை அமைச்சர்களின் மேலான கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.
2016 ஜுலை ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில்நடந்த சட்ட மன்றக் கூட்டத் தொடரில் கல்வித் துறை சம்மந்தமான அறிவிப்புகளில்இந்த பணியில் உள்ள நிபந்தனை ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழு விலக்கு தந்துஅரசாணை வெளிவரும் என எதிர் பார்த்து சுமார் மூவாயிரம் ஆசிரியர்களுக்கும்காத்து கொண்டு இருந்தனர்.அதற்கான அறிவிப்பு வராத நிலையிலும் கூட விரைவில் நல்ல முடிவு வரும் என்றஏக்கத்தில் நாட்களை எண்ணிக்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசின் கல்வித் துறை அரசாணை 181 ன் அடிப்படையில் எதிர் வரும்TNTETஅறிவிப்பு தினத்திற்கு முன்பு இந்த வகை நிபந்தனை ஆசிரியர்களின்பிரச்சினைகளுக்கு தீர்வாக TET லிருந்து பணியில் உள்ள பட்டதாரிஆசிரியர்களுக்கு முழு விலக்கு அளிக்க தமிழக அரசு முன் வந்தால் இந்த சிக்கலானசூழலில் உள்ள ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் எனபல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசிடம் கோரிக்கையை வைக்கின்றனர்.இந்த வகை நிபந்தனை ஆசிரியர்களின் வேண்டுதல்களை தமிழக அரசு தீர்த்துவைக்கும்நிலையில் பல நாட்களாக எதிர்பார்ப்பில் உள்ள ஆசிரியர்களின் வாழ்வாதாரம்பாதுகாக்கப்படும் என்பது உண்மை.
Thanks to Mr. Chandru
நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும். அரசாணை 181 முன்னர் நியமனம் பெற்றவர்கள் நிலை மாறும்.
ReplyDeleteThank u sir
Deleteplz pray God
ReplyDelete