TET – What's Next? – Padasalai.Net’s Special Article
அன்புள்ள பாடசாலை
வாசகர்களே, வணக்கம்.
நீண்டகாலத்திற்குப்
பிறகு நமது பாடசாலையின் சிறப்பு கட்டுரை வெளியிடப்படுவதில் மகிழ்ச்சி.
1) டெட் பணி நியமனம்
உடனடியாக வர வாய்ப்பு உள்ளதா?
ஆம். ஆனால் அதில்
பல்வேறு நிர்வாக சிக்கல் உள்ளது. முதற்கட்டமாக பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை,
சமூக நலத்துறை, ADW, கள்ளர் பள்ளிகள் உட்பட அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்கள்
கணக்கிடப்பட்டு, அவை மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும் தொகுக்கப்பட்ட பிறகு,
பல்வேறு இடஒதுக்கீடு அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேவைப்படும் ஆசிரியர்களை
ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு, பிறகு இறுதி
பட்டியல் வெளியிடப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும். பொதுவாக கல்வி ஆண்டின்
இறுதி கட்டத்தில் (ஏப்ரல் மாதங்களில்) பணி நியமனம் நடைபெறுவதில்லை.
மாவட்ட அளவில் காலிப்பணியிடங்கள் பட்டியல்
தொகுத்து மாநில அளவில் வழங்க பிப்ரவரி மாத முதல் வாரமே இறுதி நாளாக வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஏறத்தாழ
ஒரு வாரத்திற்குள் மாநில அளவிலான காலிப்பணியிடங்களின் பட்டியல் தொகுக்கப்பட்ட பிறகு
உடனடியாக ஆசிரியர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்து இதர அனைத்து பணிகளும் முடிவடைந்து பணி
நியமன ஆணை வழங்கி பணியில் சேர தோராயமாக மார்ச் மாதம் ஆகலாம். ஆனால் தற்போது உள்ள தமிழக
அரசியல் சூழ்நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பணி நியமனம் நடைபெற முதல்வர் அலுவலகத்திலிருந்து
உரிய ஆணை உடனடியாக கிடைப்பதில் தாமதம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே ஆசிரியர் பணிக்காக
காத்திருப்பவர்களின் ஏக்கம் ஆகும்.
2) உச்ச நீதிமன்ற
தீர்ப்பு, வெளியானவுடன் மாண்புமிகு கல்வி அமைச்சர் டெட் தேர்வு உடனடியாக நடைபெறும்
என கூறினார். ஆனால் தற்போது டெட் தேர்வு தாமதமாகும் என கூறியுள்ளாரே அதற்கான காரணம்
என்ன?
கடந்த சில ஆண்டுகளாக
டெட் தேர்வு நடத்தப்படாமல் இருந்ததால் உடனடியாக டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே
அரசின் விருப்பமாகும். ஆனால் புதிதாக தேர்வு வைத்தால் அத்தேர்வு குறித்த அறிவிப்பு
வெளியிட்டு, தேர்வு நடத்தப்பட்டு, உத்தேச கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டு, இறுதி முடிவு
வெளியிட மேலும் பல மாதமாகும். இதற்கிடையில் தேர்வு குறித்தும், கீ ஆன்சர்கள் குறித்தும்
பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் மேலும் தாமதமாகும்.
எனவே தான் உடனடியாக பணி நியமனம் நடத்தி முடிக்கவும், அதன் பிறகே தேர்வு குறித்த அறிவிப்பு
வெளியிடவும் அரசு விரும்புகிறது.
3) புதிய டெட் தேர்வு உடனடியாக அறிவிக்கப்பட்டால், என்ன நிகழும்?
நிச்சயமாக பணி நியமனம் முடிவடைவதற்கு முன்னதாக புதிய தேர்வு அறிவிக்கப்பட்டால், அரசு பணிக்காக காத்திருப்பவர்கள் பணி நியமனத்தை நிறுத்தி வைக்குமாறும், தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பிறகு புதிய டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் Consider செய்த பிறகே பணி நியமனம் நடைபெற வேண்டும் என Stay Order வாங்குவார்கள். இதனால் மேலே குறிப்பிட்டது போல் பணி நியமனம் நடைபெற பல மாதங்களாகும். அதனால் தற்போதைக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்படும் வரை புதிய டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருப்பதே பலனளிக்கும்.
4) உடனடியாக டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என வழக்கு தொடரலாமா?
கடந்த ஆண்டின் துவக்கத்திலேயே முதுகலை ஆசிரியர் சங்கம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிப்பதால் உடனடியாக PGTRB தேர்வு வைத்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பும் தங்களுக்கு சாதகமாக பெற்றது நினைவிருக்கலாம். ஆனாலும் இன்று வரை புதிய PGTRB நடத்தப்படவில்லை என்பதே நிதர்சனம். காரணம் நீதிமன்ற தீர்ப்புகள் - Court Direction ஆணை வழங்குமே தவிர இறுதி கட்ட தேதி குறிப்பிட்டு, அதற்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பொதுவாக கெடு விதிப்பதில்லை. எனவே தான் அரசை இது சார்பாக கட்டாயப்படுத்த முடியாது.
5) புதிய டெட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட பிறகே தற்போது நடைபெற உள்ள பணி நியமனங்கள் நடைபெற வேண்டும் என வழக்கு தொடரலாமா?
அவ்வாறு வழக்கு தொடர்ந்து Stay Order பெறுவதால் பணி நியமனம் மீண்டும் தாமதமாகுமே தவிர, இறுதி வெற்றி கிடைப்பது சிரமமே. காரணம் கடந்த சில ஆண்டுகளாக பணி நியமனம் நடைபெறாததால் மாணவர் நலன் பாதிக்கப்படுகிறது என ஒரே வாதத்தை முன்வைத்து அரசு மிக சுலமாக Stay Order - ஐ இரத்து செய்து விடும்.
6) புதிதாக நடைபெற உள்ள பணிநியமனத்தின் போது தற்போது உள்ள வெயிட்டேஜில் உள்ள குறைகள் களையப்பட்டிருக்குமா?
வெயிட்டேஜ் முறை கணக்கிடுவதில் பல்வேறு குறைகள் உள்ளன என நமது பாடசாலை துவக்கம் முதலே பல்வேறு கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம். ஆனாலும் தற்போது உள்ள வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் நடந்தால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கூட மீண்டும் வழக்கு தொடர சாத்தியம் குறைவு. ஆனால் மிக சரியான ஒரு வெயிட்டேஜ் முறை கண்டறியப்பட்டு அதனடிப்படையில் பணி நியமனம் நடப்பதாக வைத்துக்கொண்டால், அப்புதிய, சரியான வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஒரு சிலரேனும் நிச்சயம் மீண்டும் வழக்கு தொடருவர். இதனால் பணி நியமனம் மீண்டும் தாமதமாகும். அதனால் தற்போது நடைபெற இருக்கும் பணி நியமனத்தில் அரசின் முந்தைய நிலையே தொடர வாய்ப்பு உள்ளது. தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த டெட் தேர்வு மற்றும் பணி நியமனத்திற்குள்ளாவது இப்பழைய வெயிட்டேஜ் முறையில் உள்ள குறைகளை களைவது மிகவும் அவசியமாகும்.
7) தற்போது 8 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது சாத்தியமா?
பள்ளக்கல்வித்துறை, தொடக்கக்கல்வித்துறை, மற்றும் இதர பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டால் ஓரளவு சாத்தியம் தான். இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்க அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தினாலும் பொதுமக்களின் தனியார் பள்ளி மோகத்தின் காரணமாக பல பள்ளிகளிலும் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், மாவட்டந்தோறும் உபரி பணியிடங்கள் என கணக்கிடப்பட்டு பந்தாடப்பட்டு வருவதால், புதிய பணியிடங்கள் 8 ஆயிரம் நிரப்பப்படும் எனும் அறிவிப்பு ஆசிரியர்-மாணவர் விகிதம் குறைப்பதன் அச்சாரமாக கருதலாம். ஆனால் கணித பாடம் உட்பட முக்கிய பாடங்களுக்கு முன்னதாகவே தமிழகம் முழுவதும் உபரி ஆசிரியர்கள் அதிக அளவில் உள்ளதால், அப்பாடங்களை பயின்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு இதர பாடங்களை காட்டிலும் அதிகபட்ச பணியிடங்கள் ஒதுக்கபடக் கூடிய வாய்ப்பு குறைவு.
8) அடுத்த டெட் தேர்வு எப்போது நடத்தப்படலாம்?
டெட் தேர்வு நடத்தப்பட தேர்வறை கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்களும், இதர பணிகளுக்காக கல்வித்துறையின் அலுவலக பணியாளர்களும், தேர்வர்களுக்கு சுலபமான தேர்வு மையங்களும் தேவை. ஆனால் வர இருக்கக்கூடிய பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதங்களாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் முழு கவனமும் பொதுத் தேர்வு குறித்தே இருக்கும். அக்கால கட்டங்களில் தேர்வு மையங்கள் கிடைப்பதும் கடினம். எனவே மார்ச் மாத இறுதிக்குள் பணி நியமனங்கள் குறித்த அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டால், அடுத்த ஓரிரு வாரங்களிலேயே புதிய டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு மே மாதத்தில் தேர்வு நடத்தப்படக்கூடிய வாய்ப்பு மிக, மிக அதிகம்.
9) டெட் தேர்வுக்கு எப்போதிருந்து தயாராகலாம்?
ஓட்டப்பந்தயம் துவங்கிய பிறகு ஓட முயற்சிப்பவர்களை விட, முன்னதாகவே ஓடுவதற்கு உரிய பயிற்சி பெறுபவர்களே எளிதில் வெற்றியடைய முடியும். அடுத்த டெட் தேர்வு மே 2017 ல் முடிவடைந்து முடிவுகள் டிசம்பர் 2017க்குள் வெளியிடபடும் என வைத்துக்கொண்டால் அடுத்த கட்ட பணி நியமனம் உடனடியாக பிப்ரவரி 2018 அல்லது ஜுன் 2018 ல் நடப்பதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக தாள் 1 மற்றும் தாள் 2 என அனைத்தும் சேர்ந்து 2000 பணியிடங்கள் கிடைப்பதே அரிது. எனவே போட்டி மிக கடுமையாக இருக்கும்.
தோராய இலக்கு உங்களுக்கு சுட்டிக்காட்டி விட்டோம். அதற்கான கடுமையான உழைப்பை வழங்குவது உங்களின் கடமை. 2018ல் பணி நியமனம் பெறக்கூடிய ஒரிரு ஆயிரம் ஆசிரியர்களில் நீங்களும் இருக்க வாழ்த்துக்கள்!
டெட் பணிநியமனங்கள் குறித்தும், அடுத்த டெட் தேர்வுகள் குறித்தும் நமது பாடசாலை வாசகர்களுக்கு ஓரளவிற்கேனும் தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. நமது முந்தைய கட்டுரைகளின் பிரதிபலிப்புகளை நமது நீண்டகால வாசகர்கள் நிச்சயம் அறிவர். - இக்கட்டுரை குறித்த தங்களின் கருத்துகளையும், சந்தேகங்களையும் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் அவசியம் குறிப்பிடவும்.
நன்றி!
என்றும் அன்புடன்
- உங்கள் பாடசாலை.

Get Ready, Study Hard, Best of Luck!
நன்றி!
என்றும் அன்புடன்
- உங்கள் பாடசாலை.
How many vacancy available. Please give me subject wise data
ReplyDeleteKeelkanda enathu kelvigalukku padasalai admin bathil thara vendukiren.... 1.Tet thervil pass seithavargalukku posting endral pass seitha 30000 peraiyum thodarnthu elum kaali pani idangalil amarthuvargala? 2.Tharpodhu pass seithullavargal weightage muraiyal posting kidaikathavargal endral, avarkal meendum evvaru weightage'kkul vara mudiyum? 3.Year 2013 TET thervil pass seithavargalai kondu posting potta pinbum, second list moolam posting poda mudiyuma? because 'pass seitha anaivarukkum velai'endru govt G.O. sollavillaiye! Please, kindly answer to my questions. Thanks.
Delete1) அடுத்த தேர்வு நடந்து முடிந்து, முடிவுகள் வெளியிடப்படும் வரை முந்தைய தேர்வின் அடிப்படையில் காலி இடங்களை நிரப்ப இயலும்.
Delete2) தற்போது தேர்ச்சி பெற்றவர்கள் வெயிட்டேஜ் முறையால் பணி கிடைக்க வில்லை என்றால், அடுத்த வரக் கூடிய டெட் தேர்வுகளில் மேலும் அதிக மதிப்பெண் பெற்று தங்களின் வெயிட்டேஜை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும் (இது தான் குளறுபடி என்பது பாடசாலையின் கருத்து),
3) அடுத்த தேர்வு முடிவு வெளியிடப்படும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் முந்தைய தேர்வு முடிவின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய முடியும். அரசாணை என்பதே அரசு உருவாக்குவது தான்.
அடுத்த டெட் தேர்வுக்கு இப்போதிருந்தே பயிற்சியை துவக்கவும். வாழ்த்துக்கள்.
We thank 'Pada Salai, for immediate response to our questions. Thank you sir.
DeleteWe thank 'Pada Salai, for immediate response to our questions. Thank you sir.
Deleteiam sc candidates english major 57.67 paper 2 Kidaikuma sollunga
ReplyDeleteNitchayamaga edhirpakkalam
Deletepaper 2 list coming soon
ReplyDeletePaper1 oc candidate last cutoff enna
ReplyDeletePaper1 oc candidate last cutoff enna
ReplyDelete75.32 for OCG and 75.30 for OCW
DeleteSir ennodathu 80.s something run email kidaikala
DeletePaper2 English vacant may be sollungal admin sir?
ReplyDeleteNearly 400
DeleteMaths,paper2 vacancy sir
DeleteBC English 61.63. Is there chance
DeleteBC English 61.63 is there chance
DeletePhysics 66.17 bc. Kidaikka vaaipu irukka sir.last year 66.52 varai posting pottanga.
ReplyDeletePhysics 66.17 bc. Kidaikka vaaipu irukka sir.last year 66.52 varai posting pottanga.
ReplyDeleteWhen will come to pg trb. A tn govt allowed to pg trb .but still not come. Why?
ReplyDeleteOur education minister talk about one or two days will announce pg trb. Why should talk about that announce. But still not come pg trb.Then what can we do pg trb candidates
ReplyDeletePaper 2 maths vacancy msy be how much sir?
ReplyDeletePlease tell me
ReplyDeletePlease tell me
ReplyDeleteSir tell I am BC english
ReplyDeleteSir tell I am BC english
ReplyDeletePlease tell me
ReplyDeleteThelivana katurai... Nandri.
ReplyDeleteMaths approx. Vacancy
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தோராயமாக எவ்வளவு இருக்கும் சார்.
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர் B.C vacant எவ்வளவு இருக்கும் Sir.
ReplyDeleteLast tet paper 1 last cut off..pls.
ReplyDeletePaper 1 Ku evlo vacancy vara chance iruku...last tet appointment la paper 1 Ku last cut off evlo sir...pls
ReplyDeleteகட்டுரை மிக துல்லியமாக வெளியிட்டுள்ளீர்கள்.நன்றி.
ReplyDeleteஉங்கள் கட்டுரை படி அனைத்து பணிகளும் நிறைவேறினால் அனைவருக்கும் நன்று.நன்றி
Thank u padasalai admin sir
ReplyDeleteThank u admin sir
ReplyDeleteThankyou
DeleteThankyou
ReplyDeleteThank u for the article
ReplyDeleteWhat may the cut off for BcG chemistry?
Thank u for the article
ReplyDeleteWhat may be the cut off for BcG chemistry?
Bc physics cut off approximate evalavu varum sir
ReplyDeleteSir pl any idea on cut off of BOTANY. .PL.SHARE
ReplyDeleteBotany BC cut off pl.(BC_G ) IN TNTET 2013 AFTER appointment in Social Welfare, CORPORATIONS and Municipal Schools. ..any idea please.
ReplyDeleteSir please tell will the government follow employment seniority becoming the appointments to the tet pass candidates?
ReplyDeletenice.....paper2 bacancy in english sollunga pls by Anbazhagan
ReplyDeleteHi sir Tamil paper2 evalo vacancy irukum
ReplyDeleteThankyou. For article
ReplyDeletesir pgtrb history vacancy irukka sir pls sollunga
ReplyDeletepgtrb - varuma sir? Government ippadiyey irunthaal age-thaan athikamaka agividum.
Sir I am oc category
ReplyDeleteMaths weightage 69.3
Any chances for me
Sir I am oc category
ReplyDeleteMaths weightage 69.3
Any chances for me
மதிப்பிற்குரிய அட்மின் அவர்களுக்கு அருமையான சிறந்த விளக்கங்களுடன் உங்கள் பதிவு அமைந்துள்ளது உங்களுக்கும் பாடசாலைக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்..,
ReplyDeletePaper 2 chemistry BC female cuttoff 63.80.Have any chances for posting.
ReplyDeletePaper 2 chemistry BC female cuttoff 63.80.Have any chances for posting.
ReplyDeleteCOMPUTER SCIENCE SUBJECT TET OR TRB VARUMA?
ReplyDeletePaper 2 chemistry BC female cuttoff 63.80. Have any chance for posting.
ReplyDeletePaper 2 chemistry BC female cuttoff 63.80.Have any chances for posting.
ReplyDeleteDear Padasalai Admin Sir, Maths bc evlo weightage iruntha vaippu kidaikum... Please reply sir
ReplyDeleteUnga weightage enna sir
Delete65.1 maths,mbc,any chance
DeleteHi physics BC cut off 65.43is there any chance???
ReplyDeleteGood article very useful for us
ReplyDeleteWhat about the Minority language?; Will they consider us or not for paper1 and paer2
ReplyDeleteநான் tet ல் 90mark,HSC 80%,Dted80%,வாங்கினேன்என்னுடைய cutoff 80.somethingவந்த்துoc candidate எனக்கு வாய்ப்பு உள்ளதா
ReplyDeleteNalathunadanthal sari. Artical super sir
ReplyDeleteMbc maths paper 2 approximate a ethana cut off varaikum varalam last selection cutt off is 69.34
ReplyDeletemaths ku apo totala evlo vacancy irukum?
ReplyDelete8000 posting potutu remaining ullavungala eppom edupanga
ReplyDeleteDear Admin How could you say about 400 vacancies in English subject As the list is not yet be prepared?
ReplyDeletePlease read again - "may be" word used in question. So our answer is approximate value only.
DeleteI forgot how to put weightage so please can any one tell me how to put weightage
Deleteஅட்மின் அவர்களே paper 1 இல் பி.சி இற்கு cutoff எவ்வளவு குறைய இருக்கின்றதா?
ReplyDeletePaper 1 vacant ? Plz reply anyone
ReplyDeleteAdmin plz rply expected vacant paper 1??
ReplyDeleteAny one plz reply me
ReplyDeleteAdmin., please give some info for minority languages (i.e Telugu and Urdu schools)
ReplyDeleteAdmini sir...this artical very useful..pap 2 eng..sc..last cutoff 63.16...ny cut off 62.4...dif s 0.76...any chance ? plz rply...
ReplyDeleteHow many vacancies for Paper 1 ?
ReplyDeleteHow many vacancies for Paper 1 ?
ReplyDeleteHow many vacancies for paper 1? Tell me sir approximately.
DeleteHow many vacancies for paper 1? Tell me sir approximately.
DeleteAdmin Sir paper2 maths BC Weightage 61.89 any chance in second list?
ReplyDeletesir physics paper 2 weightage 58.30 handicapped any chance
ReplyDeleteSir do you know about B.T history vacancy? And I have 58.03 % can i get the job?
ReplyDeleteWhat a rumour it is.
DeleteWhat a rumour it is.
Delete