இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும்,
பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்காக 11 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன.மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுத்தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது.
தமிழகத் தில் டெட் தேர்வு நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) விதிமுறை. ஆனால், நீதிமன்ற வழக்குகள் காரண மாக தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
தற்போது வழக்குகள் முடிவடைந்து விட்டதால் டெட் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும் அதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ஏப்ரல் 30-ம் தேதியும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.
டெட்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர் பாக பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்துமாறு பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வை (தாள்-2) ஏப்ரல் 30-ம் தேதியும் (ஞாயிற்றுக் கிழமை) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தேர்வுக் கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 8-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் ஏப்ரல் மாதம் நடத்தப் படவுள்ள டெட் தேர்வு 3-வது டெட் தேர்வாகும். தமிழகத்தில் முதலாவது டெட் தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதமும், அந்த தேர்வில் நேரக்குறைவு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கைமிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் நேரத்தை அதிகரித்து அதே ஆண்டு அக்டோ பர் மாதம் துணை தேர்வாக இன்னொரு தேர்வும், அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் என 3 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக் கென சிறப்பு டெட் தேர்வு 2014-ம்ஆண்டு மே மாதம் நடந்தது. பொதுவான டெட் தேர்வு என்று பார்த் தால் இதுவரை 3 டெட் தேர்வுகள் நடத்தப்பட்டுள் ளன. ஏற்கெனவே நடத்தப்பட்ட டெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
7 ஆண்டுகள் செல்லத்தக்கது
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் உடனடியாக ஆசிரியர் வேலை கொடுக்கப்படுவதில்லை. வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில்தான் ஆசிரியர் கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, டெட் தேர்வு மதிப்பெண் 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ் 2, இடைநிலை ஆசிரியர் படிப்பு மதிப்பெண்) கணக்கில் எடுக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. .டெட் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது ஆகும். எனினும் தேர் வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் மதிப் பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் டெட் தேர்வு எழுதலாம்
April 29 and 30 thethikalil Tnpsc Group VII and VIII thervugal nadaipera ullana. Athe thethigalil TET thervu nadathuvathu niyayama? TRB'kku idhu theriyatha? Meendum sikkal ela minister muyatchikkirara?
ReplyDeletecomputer science department will write tet exam?
ReplyDeletecomputer science department will write tet exam?
ReplyDeleteis microbiology eligible for tet exam 2017? please answer it
ReplyDelete