தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி
நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.,
தலைவர் மற்றும், 14 உறுப்பினர்கள், கவர்னரால் நியமிக்கப்படுகின்றனர்.
காலியாக இருந்த, 12 இடங்களில், 11 உறுப்பினர்கள், 2016ல்
நியமிக்கப்பட்டனர்.
இதில்,
விதிமீறல் இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் 11 உறுப்பினர்களின் நியமனம்
செல்லாது என அறிவித்தது; உச்ச நீதிமன்றமும், உறுதி செய்துள்ளது.அரசு பணி
நியமனம் தொடர்பாக, உறுப்பினர்கள் கூட்டம் நடத்த மொத்தம், 15 பேரில், ஐந்து
பேர் இருக்க வேண்டும்.ஆனால், தற்போது தலைவர் அருள்மொழி, உறுப்பினர்கள்
பன்னீர்செல்வம், குப்புசாமி என, மூன்று பேர் மட்டுமே இருப்பதால், ஆணைய
கூட்டத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...