Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தேர்வு என்றால் என்ன?யார் எழுதலாம்?எப்படி படிக்கலாம்?

விரிவான பதில் பதிவு :
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடந்தபடும்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

இவ்வகையில் ஆசிரிய பணியில் சேர்ந்த ஆசிரியர் எதிர்வரும் 7 ஆண்டுகளில் இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இவ் விதி பொருந்தும்.
ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை இத்தேர்வு மாநில / மத்திய அரசால் நடத்தபடும்
(சட்ட சிக்கல் காரணமாக தமிழகத்தில் 2 வருடமாக தேர்வு நடத்தப்படவில்லை )
அரசு பணி இவ்வகையில் தேர்ச்சி பெறும் தேர்வரை கொண்டு நிரப்பப்படும்
TET தேர்வு முறை என்ன?
தேர்வு முறை:
கோள்குறி வினாக்கள் 150 இடம்பெறும். தவறான வினாவிற்கு மதிப்பெண் குறைக்கபடாது
* DTEd முடித்தவர் தாள் 1
* B.Ed. முடிந்தவர் தாள் 2 எழுத வேண்டும்
பாட திட்டம் யாது?
பாட திட்டம் :
தாள் 1: 1 முதல் 8 வரை
அனைத்து பாடம் -120
உளவியல் - 30
தாள் 2: 6 முதல் 10 வரை
தமிழ், ஆங்கில, சமூக அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
சமூக அறிவியல் - 60
உளவியல் - 30
கணித, அறிவியல் பட்டதாரிகளுக்கு
தமிழ் - 30
ஆங்கிலம் - 30
அறிவியல் - 30
கணிதம் -30
உளவியல் - 30
B.Ed. இரண்டாம் ஆண்டு படிப்பவர் இத்தேர்வை எழுதலாம் ( அதிகார பூர்வ தகவல் தேர்வாணய தகவலில் தெரியும்)
B.E., B.Sc. (CS) , M.Com., B.Ed பட்டதாரிகள் இத்தேர்வை எழுத முடியமா?
தேர்வாணய அறிவிப்பில் அறிவிக்கப்படும்
எப்படி படிக்கலாம்?
சமச்சீர் புத்தகம் 1 முதல் 10 வரையில் வரி வரியாய் புரிந்து படித்தல் அவசியம்
உளவியல் - நகராஜன், மீனாட்சி சுந்தரம் புத்தகம் 95% துணை புரியும்
குறிப்பேடுகளை (மெடி ரியல் ) சார்ந்து மட்டுமே இருப்பதை தவிர்க்கவும். இவை துணை கருவியே.
சுய குறிப்புகள், நாள் தோறும் திருப்புதல், புத்தக முழு வாசிப்பு இவையே வெற்றி இரகசியம்
தேர்ச்சி மதிப்பெண்:
தேர்ச்சி பெற 90 மதிப்பெண் தேவை
MBC /BC / SC / ST 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி
தேர்வு செய்யும் முறை :
தமிழகத்தில் வெயிடேஜ் முறை அடிப்படையில் அரசு பணியில் தேர்வர் தெரிவு செய்யபடுவர்
டெட் மதிப்பெண் x 60%
HSC×10%
Degree×15%
B.ed×15%
மாற்றத்திற்கு உரியது *
விண்ணப்பம் மாவட்டம் தோறும் வழங்கபட்டு முறைப்படி வாங்கப்படும். இந்த ஆண்டு 2017 TET தேர்வு ஏப்ரல் இறுதியில் நடக்க இருக்கிறது. இதற்கான அறிவிக்கை ஆசிரிய தேர்வாணயம் மூலம் அறிவிக்கபடும்.
மேலும் தகவலுக்கு www.tn.trb.nic.in
வலைதளத்தை பார்வையிடலாம்
முயற்சி செய்பவர் அனைவரும் வெற்றி பெறுவதில்லை
ஆனால் ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னும் ஒரு கடின முயற்சி உள்ளது
வாழ்த்துகளுடன் - பிரதீப் பட்டதாரி ஆசிரியர், பூங்குளம்




26 Comments:

  1. Can BE graduate write this exam?

    ReplyDelete
  2. Can BE graduate write this exam?

    ReplyDelete
  3. paper 2.blit.with DTEd not eligible!!!!!

    ReplyDelete
    Replies
    1. TNTET Paper 2- I m also completed DTED & B.Litt.
      I am eligible or not please tell me.

      Delete
  4. Sir i got an appointment in aided school in 29 june 2014 but i have passed my mphil degree at 2012. After appointment in school i have completed my mphil viva in 29.August 2014. Am i elegible for incentive ? Or i will request to get any pre permision or after permission?

    ReplyDelete
    Replies
    1. You are eligible to get the incentive because your viva date is actual m.Phil pass date

      Delete
  5. Computer Science with B.Ed Eligible -la Sir?

    ReplyDelete
  6. Can write M.sc computer science with B.Ed?

    ReplyDelete
  7. B.LIT WITH TAMIL PANDIT TRAINING ..PAPER 2 ELIGIBLE LA SIR ?

    ReplyDelete
  8. Computer Science with B.Ed Eligible -la Sir?

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே, நான் B.P.Ed, M.P.Ed (உடற்கல்வி ) படித்துள்ளோம் ... நாங்கள் இந்த TET எழுதலாமா? எங்களுக்கும் இந்த தகுதி தேர்வு உண்டு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார்கள் அதற்கான முக்கிய கேள்வி & பதில் வெளிட்டுள்ளீர் .

    ReplyDelete
  10. மகிழ்ச்சி...

    ReplyDelete
  11. I completed b.ed degree (computer science) in 2007 and now I completed B.A., English( 3 years course 2012-2015) in 2015. Can I able to write TET Exam , Whether I am eligible to work as English teacher . Is my B.Ed is eligible to my B.A English. In my B.Ed Optional 1 is computer science and Optional 2 is English)
    Kindly reply

    ReplyDelete
    Replies
    1. நீங்க தகுதியானவர் தாள் 2 எழுத

      Delete
  12. MA Economics BEd , TET exam alutha lama.

    ReplyDelete
  13. Sir I have completed BCA, b.ed . Pls sir kindly reply me sir. Am i eligible for tntet or not. Can I apply sir?

    ReplyDelete
  14. I m BE ECE completed. So I m eligible or not sir?

    ReplyDelete
  15. BE students eligible ah sir

    ReplyDelete
  16. ஒரு முறை TET தகுதித்தேர்வு எழுதி(கணிதத்தில்) தேர்வான பின்பு மீண்டும் ஒரு பட்டப்படிப்பு(B.A Tamil) படித்தால் அதற்கும் தனியாக TET எழுத வேண்டுமா அல்லது இதையே பயன்படுத்திக் கொள்ளலாமா?

    ReplyDelete
  17. வணக்கம் ஐயா
    12 ம் வகுப்பு முடித்தவுடன் ஆசிரியர் பயிற்சி படித்தவுடன் வேலைவாய்ப்பு பற்றி கூறவும் நன்றி.

    ReplyDelete
  18. Sir I have completed BSc computer science and MCA degree.can I apply sir

    ReplyDelete
  19. Sir I have completed BE computer science Engineering.can I apply

    ReplyDelete
  20. Correspondence la D.ted mudicha tet ezhudhalama sir

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive