மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு- கடந்த 2013 ல் நடந்த TET தேர்வில் தேர்ச்சி பெற்று மூன்று வருடங்களாக எந்த
விடையும் தெரியாத எங்களுக்கு தங்களின் தற்போதைய அறிவிப்பு ஒரு வித
நிம்மதியாக உள்ளது.
அதே சமயம் நாங்கள் பள்ளி செல்லும் காலத்தில் பள்ளி செல்வதே சிரமமான சூழலில்
பள்ளிகளில் போதிய ஆசிரியர்களுமின்றி படித்து தேர்ச்சி பெறுவதே போராட்டமாக
இருந்தது. அத்தகைய சூழலில் படித்து அன்றைய சூழலில் அதிக மதிப்பெண் பெற்று(
இன்றைய சூழலில் அது குறைந்த மதிப்பெண்)தேர்ச்சி பெற்று பட்டம்
பெற்றோம்.என்றாவது ஒருநாள் எங்களின் ஆசிரியர் கனவு நனவாகும் என்ற
நம்பிக்கையில் காத்திருந்த எங்களுக்கு தமிழக அரசின் ஆசிரியர் தகுதித்
தேர்வு பெரும் சவாலாக அமைந்தது.பணிக்குச் சென்று குழந்தைகளையும்
குடும்பத்தையும் கவனித்து கஷ்டத்திலும் நம்பிக்கை விடாது படித்து தகுதித்
தேர்வில் தேர்ச்சியும் பெற்றோம்.ஆனால் தற்போது TET தேர்ச்சி பெற்றும்
வெயிட்டேஜ் முறையால் எங்களின் முயற்சிகள் செல்லாக்காசாகி நிற்பது
எங்களுக்கு பெரும் மனவேதனையை தருகிறது.நாங்கள் 140 மதிப்பெண்களுக்கு மேல்
பெற்றாலும் ஆசிரியராக முடியாத ஒரு சூழலை காணமுடிகிறது.எனவே தாங்கள்
எங்களின் மீது கருணை உள்ளம் கொண்டு யாரையும் பாதிக்காத வண்ணம் தேர்வு
செய்யும் முறையை மாற்றி அமைத்திட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக வேலை
வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் எங்களுக்கு வேலை
வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்து உதவிட வேண்டும்
என்றும் பணிவோடு வேண்டுகிறோம்.இம்முறை அறிமுகம் செய்தால் இன்றில்லை
என்றாலும் என்றாவது ஒரு நாள் ஆசிரியர் பணி கிட்டும் என்ற நம்பிக்கையிலாவது
எங்கள் வாழ்க்கைச் சக்கரம் ஓடும்
இப்படிக்கு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு(40 வயதை கடந்த) ஆசிரியர்கள்.
Thanks excellent
ReplyDeleteஅருமையான முயற்சி
ReplyDeleteஅருமையான முயற்சி
ReplyDelete